PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

01. கடலில் வாழும் பாசிகள் ஒரு தனி வகை பச்சையத்தைக் கொண்டுள்ளன. இந்தப் பச்சையத்தை உற்பத்தி செய்யும் மரபணுவை எடுத்து நிலத்தில் வாழும் தாவரங்களுக்கும் பொருத்த முடியும். அப்படிச் செய்தால் அவற்றின் ஒளி ஈர்க்கும் திறன் அதிகமாகும். இதனால், தாவரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



05. சமீபத்தில் 3டி பிரின்டிங் முறையில் ஜெர்மனியில் 6,600 சதுர அடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெறும் 140 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடம் தான், 3டி பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பெரிய கட்டடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

