sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?

புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?

புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?


PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். அதிலும் குடல் புற்றுநோய் அபாயகரமானது. உலக அளவில் குடல் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். இதைத் தடுப்பதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பைச் நிகழ்த்தியுள்ளது.

குடல் புற்றுநோயை அதிகப்படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) என்னும் ஒரு நொதிக்கு முக்கியமான பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதியைச் செயலிழக்கச் செய்ய எஸ்பி2509 என்னும் ஒரு மூலக்கூற்றைப் பயன்படுத்த முடியும். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க டெலோமெரேஸ் நொதிக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.

அதாவது சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது ஆடு, பன்றி, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த இறைச்சியில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு நல்லது தான் என்றாலும் கூட அளவை மீறும்போது இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்படுத்துகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us