
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலை வாயில் சிக்கினால், எந்த உயிரினமும் உயிரோடு திரும்பாது. ஆனால், புளோவர் என்ற பறவை இதில் விதிவிலக்காக உள்ளது. சதுப்பு நிலங்களில் காணப்படும் இந்த பறவை, முதலையின் கடை வாய் பகுதி வரை செல்லும்.
முதலையும் இதை அனுமதிக்கும்; இதற்கு காரணம் முதலையின் பற்களையும், நாக்கையும் சுத்தம் செய்கிறது இந்த பறவை. அங்கு ஒட்டியிருக்கும் புழு, பூச்சிகளை பிடித்து உண்ணும்.

