ADDED : ஆக 18, 2010 11:02 PM
அ நிறம் | அளவு
தேனி: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன.
கலெக்டர் முத்துவீரன் கூறியுள்ளதாவது; இந்திரா நினைவு குடியிருப்பு திட் டத்தின் கீழ் மாவட்டத்தில் 2010-11ல் 1,894 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள் ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீதம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடற்ற, வறுமை கோட் டுக்கு கீழ் வாழும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின் றன.தகுதியானவர்கள் உரிய சான்றுகளுடன் வீட்டு மனைபட்டா நகல், ரேஷன் கார்டு நகல், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகை ப்படத்துடன் ஆகஸ்ட் 31க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
