உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சபரிமலையின் புனித பம்பை நதி கடலில் கலப்பதில்லை.
வேம்ப நாட்டு ஏரியில் தான் கலக்கின்றது. இந்தியாவிலேயே நீளமான ஏரி இது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு தான் பிரிக்கிறது எனவே இந்த ஏரியை காயல் என்றும் சொல்வர். ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இந்த ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. பம்பை, மீனச்சல், மணிமாலா, அச்சன்கோவில், பெரியாறு, மூவாற்றுப்புழா என்ற ஆறு நதிகளின் சங்கமமாக இந்த வேம்பநாடு ஏரி உள்ளது.
