உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 05, 2026 10:00 PM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
நீளமான எல்லைகள்
உலகில் இரு நாடுகளுக்கு இடையேயான நிலப்பகுதி எல்லையில், அதிக துாரத்தை பகிர்ந்து கொள்வது அமெரிக்கா - கனடா. இதன் துாரம் 8891 கி.மீ. இப்பட்டியலில் இரண்டாவதாக ரஷ்யா - கஜகஸ்தான் (7644 கி.மீ.,) உள்ளது. மூன்றாவதாக அர்ஜென்டினா - சிலி (5308 கி.மீ.,), நான்காவதாக சீனா - மங்கோலியா (4630 கி.மீ.,), ஐந்தாவதாக இந்தியா - வங்கதேசம் (4142 கி.மீ.,) உள்ளது. அதே போல மற்ற நாடுகளுடன் நீண்டதுார எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு ரஷ்யா. இது மொத்தம் 22,400 கி.மீ., துார எல்லையை தன் அண்டை நாடுகளுடன் பகிர்கிறது.
