/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: முதல் பெண் நியமன எம்.பி.,
/
தகவல் சுரங்கம்: முதல் பெண் நியமன எம்.பி.,
PUBLISHED ON : டிச 28, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
முதல் பெண் நியமன எம்.பி.,
ராஜ்யசபாவில் மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை 245. இதில் 233 பேர் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நியமன எம்.பி.,யாக 12 பேர் (பல்வேறு துறை சாதனையாளர்கள்) ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதில் முதல் பெண் நியமன எம்.பி.,யாக (1952 - 1962) தேர்வானவர் ருக்மிணி தேவி. இவர் 1904 பிப்.,29ல் மதுரையில் பிறந்தார். பரதநாட்டியக் கலைஞர். விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்தார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். 1986 பிப்., 24ல் மறைந்தார்.

