PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஐ.நா., அமைதிப்படை தினம்
உலகில் போர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சூழல்களில் களமிறங்கி அமைதியை நிலைநாட்ட ஐ.நா., அமைதிப்படை 1945ல் உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உட்பட 120 நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது சேவையை அங்கீகரிப்பது, உலகில் அமைதியை வலியுறுத்தி மே 29ல் ஐ.நா., அமைதிப்படைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியில் முதலீடு என்பது இந்தாண்டு மையக்கருத்து. 80 ஆண்டுகளில் 20 லட்சம் வீரர்கள் இப்படையில் பணியாற்றி உள்ளனர். இதில் 4400 வீரர்கள் பலியாகினர்.
