/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கறார் வசூல் புள்ளிக்கு ' செக் ' வைத்த ஆளுங்கட்சியினர்!
/
கறார் வசூல் புள்ளிக்கு ' செக் ' வைத்த ஆளுங்கட்சியினர்!
கறார் வசூல் புள்ளிக்கு ' செக் ' வைத்த ஆளுங்கட்சியினர்!
கறார் வசூல் புள்ளிக்கு ' செக் ' வைத்த ஆளுங்கட்சியினர்!
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

நா ட்டு சர்க்கரை டீயை ருசித்தபடியே, “விதிகளை மீறி வசூல் நடக்கு வே...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி சார்பில், வணிக வளாக கடைகள், பஸ் ஸ்டாண்ட்ல பஸ்களுக்கு சுங்க வரி, வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்ல வாடகை வசூல் செய்றதுக்கு, போன ஜூ ன் மாசம் ஏலம் விட்டாவ...
“ இதுல, பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாரச்சந்தையை ஏலம் எடுத்தவங்க, பயன்பாட்டில் இல் லாத பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்காவ வே...
“அதுவும் இல்லாம, சாலை ஓரங்கள்ல காய்கறி, பழங்க ள் விற்கிறவங்க, தள்ளுவண்டி கடைகள், மினி சரக்கு வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்காவ... இதுக்கு எந்த ரசீதும் தர்றது இல்ல... இது பத்தி, நகராட்சி அதிகாரி களிடம் புகார் செஞ் சும், அவங்க கண்டுக்கல வே...” என்றார், அண்ணாச்சி.
“ஐ.டி., ஊழியர் மாதிரி, வாரத்துல அஞ்சு நாள் தான் வேலைக்கு வர்றாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“பெரம்பலுார் எஸ்.பி., ஆபீஸ்ல, 'செ ன் சிட் டிவ்'வான பதவியில ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்களுக்கு சொந்த ஊர் திண்டுக்கல்... திருச்சியில் செட்டிலாகிட்ட இவங்க, வாரத்துல அஞ்சு நாள் மட்டும் தான் ஆபீசுக்கு வர்றாங்க...
“வெள்ளிக்கிழமை சாயந்தரம் அரசு வாகனத்துலயே திருச்சிக்கு போறவங்க, திங்கள் கிழமை காலையில தான் பெரம்பலுார் பக்கம் எட்டி பார்க்கிறாங்க... அதுவும் இல்லாம எஸ்.ஐ.,க்கள், போலீசாரை கண்டபடி திட்டி தீர்க்கிறாங்க... வயசுல மூத்தவங்களா இருந்தாலும் மரியாதை தர்றது இல்லைங்க...
“தனக்கு பிடிக்காத போலீஸ் அதிகாரிகளை, எஸ்.பி.,யிடம், 'போட்டு' குடுத்து பழிவாங்கிடுறாங்க... அனு பவம், நிர்வாக திறமை இல்லாததால, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கையாள தெரியாமலும் சொதப் பிடுறாங்க... 'இவங்களை மாத்தினா எல்லாம் சரியாகிடும்'னு சக அதிகாரிகள் புலம் புறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சண்முக ப்ரியா மேட ம்... பத்து நிமிஷத்துல நானே கூப்பிடறேன்...” என, 'கட்' செய்தபடியே, “வீட்டுமனைகள் விற்கணும்னா, 'கப்பம்' கட்டணும் ஓய்...” என்றார்.
“எந்த ஊருல, யாருக்குங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் ரியல் எஸ் டேட் தொழில் பண்றவங்க, புதிய வீட்டு மனைகள் திட்டத்தை உருவாக்கினா, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு ஏக்கருக்கு, 15 லட்சம் ரூபாய் கப்பம் கட்டணும்...
“ தி.மு.க.,வினரே வீட்டு மனைகள் வித்தாலும், 'கட்சி செலவு, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கணும்'னு முக்கிய பு ள்ளி கறாரா கப்பம் வசூல் பண்ணிடறார் ஓய்...
“இந்த சூழல்ல, உடுமலையில, அதே முக்கியப் புள்ளி புதிய வீட்டு மனை திட்டத்துக்கு அனுமதி கோரி, நகராட்சியிடம் விண்ணப்பிச்சிருக்கார்... கவுன்சில் கூட்டத்துல தீர்மானம் நிறைவேற்றி, 'ஓசி'யில் ஒப்புதல் தரும்படி கேட்டிருக்கார் ஓய்...
“ஆனா, நகராட்சியில இருக்கற ஆளுங்கட்சியினரோ, 'உங்களுக்கு ஒரு நியாயம்... எங்களுக்கு ஒரு நியாயமா... குடுக்க வேண்டியதை குடுத்தா தான் அப்ரூவல்'னு ஒரே போடா போட்டுண்டா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“ஈஸ்வரா...” என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பி னர்.