தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/இடமாறுதல் போட்டும் அசைய மறுக்கும் போலீசார்!

இடமாறுதல் போட்டும் அசைய மறுக்கும் போலீசார்!

இடமாறுதல் போட்டும் அசைய மறுக்கும் போலீசார்!

1


PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டாசு சப்தம், மத்தாப்பு ஒளிக்கு மத்தியில் அதிகாலையே பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், தீபாவளி வாழ்த்துகளை பரிமாறியபடி பெரியசாமி அண்ணாச்சியும், குப்பண்ணாவும் எடுத்து வந்திருந்த பலகாரங்களை ருசித்தனர்.

நெய் முறுக்கை கடித்தபடியே, ‘‘இன்னும் ஆதிக்கம் குறையாம இருக்காரு பா...’’ என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

‘‘தி.மு.க., ஆட்சியில், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு ஒப்பந்ததாரர் ரொம்பவே கொடிகட்டி பறந்தாரு... எல்லா, ‘டெண்டர்’களையும் இவரே எடுத்து செஞ்சாரு பா...

‘‘இப்ப, த.வெ.க., ஆட்சியிலும் இவரது அதிகாரம் குறையல... அதாவது, ‘விழுப்புரம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் எல்லாம் எனக்கு ரொம்ப வேண்டியவங்க... அவங்களிடம் நான் சொல்ற காரியங்கள் எல்லாம் கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள முடிஞ்சிடும்’னு பெருமை அடிக்கிறாருங்க...

‘‘இப்படி சொல்லியே, இந்த ரெண்டு மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகிகளை விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்க வச்சு, ‘கவனிச்சு’ அனுப்புறாரு... இதை பார்க்கிற உள்ளூர் த.வெ.க.,வினர், ‘இந்த ஒப்பந்ததாரர் பக்கா தி.மு.க.,காரர்... அந்த கட்சியின் முன்னாள் அமைச்சரின் உறவினர்னு தெரியாம அவர் கூட பழகிட்டு இருக்காங்களே’ன்னு புலம்புறாங்க பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘பாலாஜி, இந்த லட்டை சாப்பிடும்...’’ என நண்பரை உபசரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ‘‘காலியிடங்களை கண்டுக்க மாட்டேங்காவ வே...’’ என்றபடியே தொடர்ந்தார்...

‘‘பள்ளி கல்வித் துறையில் இயக்குநர், இணை இயக்குநர், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள்னு ஏகப்பட்ட பணியிடங்கள் காலியா கிடக்கு... அதுலயும், இயக்குநரா இருந்த கண்ணப்பன் ஓய்வு பெற்று ரெண்டு மாசமாகியும், இன்னும் புது இயக்குநரை நியமிக்கல வே...

‘‘அதேபோல, 40க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவி உயர்வுக்கான, ‘பைல்’கள் ஆறு மாசமா கிடப்புல கிடக்கு... இதனால, இந்த பதவி உயர்வுக்கு காத்துட்டு இருந்த பல அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்னு, 200க்கும் மேற்பட்டவங்க ஓய்வு பெற்று கண்ணீருடன் வீட்டுக்கே போயிட்டாவ வே...

‘‘துறையின் முக்கிய புள்ளியும் இது போன்ற விஷயங்கள்ல ஆர்வம் காட்ட மாட்டேங்காரு... கடைசியா நடந்த முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு கூட்டத்துல, முக்கிய புள்ளி எதுகை, மோனையில சில நிமிஷம் பேசிட்டு, ‘நிறைய வேலைகள் இருக்கு’ன்னு பறந்துட்டாரு வே... என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘ராஜ்மோகன், இன்னும் ஒரு அதிரசம் சாப்பிடுங்கோ...’’ என்ற குப்பண்ணா, ‘‘இடமாறுதல் போட்டும் போகாம இருக்கா ஓய்...’’ என்றார்.

‘‘எந்த துறையிலங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘தமிழக போலீஸ்ல, ஒரே இடத்தில் மூணு வருஷங்களுக்கு மேலா வேலை பார்க்கறவாளை இடமாற்றம் பண்ணுவால்லியோ... அந்த வகையில், சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள், போலீசார்னு 80க்கும் மேற்பட்டவாளை அக்டோபர் துவக்கத்தில் செம்பியம், வியாசர்பாடி உட்பட பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாத்தி, இணை கமிஷனர் உத்தரவு போட்டிருந்தார் ஓய்...

‘‘ஆனா, இதுல 20க்கும் குறைவானவா தான் புது பணியிடங்களுக்கு போயிருக்கா... 50 முதல் 60 பேர் வரை, பழைய ஸ்டேஷன்கள்ல தான் இன்னும் இருக்கா... உயர் அதிகாரிகளும் இதை கண்டும், காணாமலும் இருக்கா ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.

‘‘முந்தா நாளு, மீன்வளத்துறை அமைச்சரோட பி.ஏ., தாமரைக்கண்ணனைப் பத்தி பேசினோம்லா... அவர் அப்படியெல்லாம் இல்லையாம்... நேர்மையானவராம்... வேண்டாதவங்க யாரோ ‘போட்டு’க் குடுத்திருக்காவவே...’’ என்ற அண்ணாச்சி, ‘‘எல்லாரும் மதியம் நம்ம வீட்டு தீபாவளி விருந்துக்கு வந்துடுங்க வே...’’ என்றபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us