தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/முக்கிய கோவிலில் நியமிக்கப்பட்ட சர்ச்சை அதிகாரி!

முக்கிய கோவிலில் நியமிக்கப்பட்ட சர்ச்சை அதிகாரி!

முக்கிய கோவிலில் நியமிக்கப்பட்ட சர்ச்சை அதிகாரி!

3


PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ‘‘கூட்டணி போட்டு, ‘கட்டிங்’ வாங்குறாங்க பா...’’ என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

‘‘யாருங்க அது...’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘துாத்துக்குடி மாவட்டம், ஏரல் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் வாங்கிட்டு, ராத்திரி நேரங்கள்ல நடக்கிற மண் கடத்தலை கண்டுக்காம இருக்காரு பா...

‘‘இதை எல்லாம் கண்காணிச்சு, எஸ்.பி., ஆபீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தனிப்பிரிவு ஏட்டும், அதிகாரியுடன் கூட்டணி போட்டு, ‘கட்டிங்’ வாங்குறாரு... இந்த ரெண்டு பேருக்குமே, எஸ்.பி., ஆபீஸ்ல இருக்கும் ஒரு அதிகாரியின் முழு ஆதரவு இருக்கிறதால, வசூல்ல புகுந்து விளையாடுறாங்க பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘ஆதம் அலி, அஜ்மல், ரபீக் எல்லாம் வர்றாங்க... உட்கார இடம் குடுங்க...’’ என்ற அந்தோணிசாமியே, ‘‘பதவிகளை பிடிக்க சிபாரிசு தேடுறாங்க...’’ என்றார்.

‘‘எந்த கட்சியில வே...’’ என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘அரசியல் கட்சி மேட்டர் இல்ல... பத்திரப்பதிவு துறையில, சில வருஷங்களா பதவி உயர்வே வழங்கல... ஆட்சி மாறிட்ட சூழல்ல, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தாங்க...

‘‘அந்த வகையில, 158 உதவியாளர்களுக்கு சார் – பதிவாளர் பதவி உயர்வு கிடைச்சது... நீண்ட காலமா காலியா இருந்த இடங்கள்ல, இவங்களுக்கு பணி நியமனம் குடுத்தாங்க...

‘‘அதேநேரம், கிட்டத்தட்ட 10 வருஷங்களா காலியா கிடந்த சார் – பதிவாளர் பணியிடங்களை, உதவியாளர்கள் தான் பொறுப்பு அதிகாரியா இருந்து பார்த்துக்கிட்டாங்க... இதுல நல்லா வசூல் நடத்தி கொழிச்சிட்டு இருந்தாங்க...

‘‘இப்ப அந்த இடங்களுக்கு, ‘ரெகுலர்’ சார் – பதிவாளர்களை போட்டுட்டதால, பொறுப்பு பதவியில இருந்தவங்களை மறுபடியும் உதவியாளர் பணிக்கே அனுப்பிட்டாங்க...

‘‘பழைய இடத்துக்கு அனுப்பப்பட்ட உதவியாளர்கள், எப்படியாவது மறுபடியும் சார் – பதிவாளர் பதவியை பிடிக்கணும்னு, தங்களுக்கு தெரிஞ்ச பிற துறைகளின் அமைச்சர்களை பார்த்து, பதிவுத்துறைக்கு சிபாரிசு பண்ணும்படி கேட்டுட்டு இருக்காங்க....’’ என்றார் அந்தோணிசாமி.

‘‘சர்ச்சை அதிகாரிக்கு முக்கிய பதவி குடுத்திருக்கா ஓய்...’’ என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

‘‘சென்னையில் மயில்கள் ஆர்ப்பரித்த ஊர்ல, பிரபலமான சிவன் கோவில் இருக்கோல்லியோ... இந்த கோவில்ல இருந்த மயில் சிலையை மாத்திட்டதா, பல வருஷங்களா சர்ச்சை ஓடிண்டு இருக்கு ஓய்...

‘‘இந்த சூழல்ல, ஏற்கனவே பல சர்ச்சைகள்ல சிக்கியவரை சமீபத்துல இந்த கோவிலுக்கு இணை கமிஷனரா போட்டிருக்கா... இவர், ஏற்கனவே தென்மாவட்டத்துல ஒரு அம்மன் கோவில்ல இருந்தப்ப, காணிக்கை எண்ணுறதுலயும், ஏலங்கள்லயும் முறைகேடுல ஈடுபட்டதா புகார்கள் இருக்கு ஓய்...

‘‘அடுத்து, சென்னையில் சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்ல இவர் வேலை பார்த்தப்ப, துறையின் கமிஷனர் அனுமதியில்லாம ஊழியர்களை நியமிச்சதாகவும் சர்ச்சை எழுந்தது... இது சம்பந்தமா அவரிடம் விசாரணையும் நடத்தினா ஓய்...

‘‘இதனால, அவரை சென்னை மண்டல பொறுப்பில் இருந்து மாத்தி, ‘டம்மி’ பதவிக்கு அனுப்பிட்டா... இப்ப, முக்கியமான கோவிலின் உயர் பதவியில அவரை நியமிச்சிருக்கறது, கோவில் ஊழியர்கள் மத்தியில அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.

‘‘அன்னக்கொடி சார் இப்படி உட்காருங்க...’’ என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us