sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 இறந்தவர்கள் வங்கி கணக்கில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்!

/

 இறந்தவர்கள் வங்கி கணக்கில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்!

 இறந்தவர்கள் வங்கி கணக்கில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்!

 இறந்தவர்கள் வங்கி கணக்கில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்!

2


PUBLISHED ON : பிப் 08, 2026 02:01 AM

Google News

PUBLISHED ON : பிப் 08, 2026 02:01 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கட்சியினரையே அதிர்ச்சி அடைய வச்சுட்டாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் தலைமையில் சமீபத்துல மதுரையில் நடந்துச்சு... இதுல, பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், தனியார் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள்னு பலரும் கலந்துக்கிட்டாங்க...

''அ.தி.மு.க., ஆட்சிக்கு விசுவாசமா இருந்து, இப்ப தி.மு.க., ஆட்சிக்கும் விசுவாசமா இருக்கிற பல சங்க நிர்வாகிகளும், முதல் ஆளா வந்து, நிறைய கோரிக்கைகளை வச்சாங்க... அதுவும் இல்லாம, 'இந்த கோரிக்கைகளை அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகள் நிறைவேற்றல... விஜய் ஆட்சிக்கு வந்துட்டா, எங்க கோரிக்கைகள் எல்லாம் அரசாணைகளா வெளியாகிடும்'னு ஐஸ் வச்சு பேசினாங்க... இதை பார்த்த த.வெ.க., நிர்வாகிகள், 'இவங்க, நம்மையே துாக்கி சாப்பிட்டிருவாங்க போலிருக்கே'ன்னு அதிர்ச்சியாகிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தொகுதியை எதிர்பார்த்தவங்க, ஏமாந்து போயிட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன்... இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.ம.மு.க.,வுக்கு போயிட்டு, 2023ல் அ.தி.மு.க.,வுக்கே வந்துட்டாரு வே...

''அங்க எந்த பதவியும் வழங்காததால, விரக்தியில இருந்தாரு... இதனால, த.வெ.க.,வினர் ஆத்துார்ல சீட் தர்றதா சொல்லி, அவரை தங்கள் கட்சிக்கு இழுக்க பேச்சு நடத்தினாவ வே...

''இதை கேள்விப்பட்ட தி.மு.க.,வினர் இடையில புகுந்து, போன வாரம், மாதேஸ்வரனை தி.மு.க.,வுல சேர்த்துட்டாவ... அவருக்கு ஆத்துார் தொகுதியை தர்றதா உறுதி குடுத்திருக்காவ... இதனால, ஆத்துார் சீட்டுக்கு காத்துட்டு இருந்த, தி.மு.க.,வினர் வெறுத்து போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''தினமும், 20,000 ரூபாய் வரை வசூல் பண்றார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில், மறைமலை நகர் போக்குவரத்து காவல் நிலையம் இயங்குது... இங்க ஒரு போலீஸ்காரர், தனது பழைய வசூல் கூட்டாளிகளா இருந்து, இறந்து போயிட்ட இருவர் மற்றும் வெளிநாட்டில் உள்ள ஒருத்தரின் வங்கி கணக்குகள்ல, மொபைல் போன் பண பரிவர்த்தனையான, 'ஜிபே' மூலமா லஞ்சம் வாங்கறார் ஓய்...

''தன் வசூல் நடவடிக்கைக்கு துணையா, ஆம்புலன்ஸ் முன்னாள் ஓட்டுநர் ஒருத்தரை, தினமும், 2,000 ரூபாய் சம்பளத்துல வேலைக்கு வச்சுருக்கார்... போன வாரம் மகேந்திரா சிட்டி பகுதியில், லஞ்சம் தர மறுத்த வாகன ஓட்டிக்கு அபராதம் போட்டிருக்கார்... அவர், முதல்வரின் தனிப்பிரிவுல புகார் குடுத்துட்டார் ஓய்...

''இதனால, பயந்து போய் அந்த வாகன ஓட்டிக்கு பணத்தை திருப்பி குடுத்திருக்கார்... தினமும் குறைஞ்சது, 20,000 ரூபாயாவது வசூல் பண்ணிடறார் ஓய்... இதெல்லாம் உயர் அதிகாரிகளுக்கு நன்னா தெரிஞ்சும், இவரை கண்டுக்க மாட்டேங்கறா ஓய்... ஒருவேளை அவாளுக்கும் பங்கு போறதோ, என்னவோ...'' என முடித்தார், குப்பண்ணா.

''முத்துக்குமரன் இப்படி உட்காருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us