என்.எஸ்.இ., ஈக்விட்டி பிரிவிலும் 'நானோ செகண்டு' வர்த்தக சேவை
என்.எஸ்.இ., ஈக்விட்டி பிரிவிலும் 'நானோ செகண்டு' வர்த்தக சேவை
PUBLISHED ON : ஏப் 12, 2026 01:03 AM

இ ந்திய பங்குச் சந்தையை உலக தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், வர்த்தக பரிமாற்றத்துக்கு 'நானோ செகண்டு' வேகத்தில் ஆர்டர் ஒப்புதல் வழங்கும் புதிய வசதியை என்.எஸ்.இ., நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு ஒரு ஆர்டரை உறுதி செய்ய '100 மைக்ரோ செகண்டு' கால அளவு தேவைப்பட்டது. தற்போது இது பல மடங்கு குறைக்கப்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தை விட மிகக் குறைவான 'நானோ செகண்டு' அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கரன்சி மற்றும் கமாடிட்டி பிரிவுகளில் ஏற்கனவே சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, நேற்று முதல் 'ஈக்விட்டி டெரிவேட்டிவ்' உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு ஆர்டரும் சந்தை அமைப்புக்கு கிடைத்தவுடன், இனி சில நானோ செகண் டுகளில் அதற்கான ஒப்புதல் கிடைத்துவிடும்.
இதன் வாயிலாக, வர்த்தகத்தில் நிலவும் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படுவதுடன், வர்த்தகர்கள் மிக வேகமான முடிவுகளை எடுக்கவும், இடர் மேலாண்மையை திறம்படக் கையாளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
