தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ செயலர் எச்சரிக்கையால் கல்வி அதிகாரிகள் கலக்கம்!

 செயலர் எச்சரிக்கையால் கல்வி அதிகாரிகள் கலக்கம்!

 செயலர் எச்சரிக்கையால் கல்வி அதிகாரிகள் கலக்கம்!

1


PUBLISHED ON : செப் 26, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026 12:56 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெது வடையை சட்னியில் புரட்டியபடியே, ''அதிரடி நடவடிக்கை எடுத்து, 10 ஆயிரம் கிலோ அரிசி கடத்தலை தடுத்திருக்கா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''எங்க வே...'' என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் மற்றும் மானிய விலையில் அரசு வழங்கும் உணவு பொருட்களை சட்டவிரோதமா கடத்தறவாளை பிடிக்கறதுக்காகவே, 'சிவில் சப்ளை' சி.ஐ.டி., போலீஸ்னு ஒரு பிரிவு இருக்கோல்லியோ... 'எல்லையோர மாவட்டங்கள்ல இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக நடக்கும் கடத்தலை தடுக்கணும்'னு, சிவில் சப்ளை துறையின் செயலர் அமுதா, கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காங்க ஓய்...

''இதுக்காகவே, ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில தனி, 'டீம்' அமைச்சிருக்கா... இந்த டீம், சமீபத்துல திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த, 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் பண்ணிடுத்து ஓய்...

''இவாளது அதிரடி தாங்க முடியாம கடத்தல் புள்ளிகள் பலரும் திருந்தி, வேற தொழிலுக்கு போயிட்டாளாம்... இவாளுக்கு பயந்து, கடத்தல், 'ஏஜன்ட்' ஒருத்தர் தற்கொலையே பண்ணிண்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த வேலையும் நடக்கல பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''சிவகங்கை மாவட்டத்துல இருக்கிற அரசு ஊழியர்களிடம், 'வேலையை கவனமா பாருங்க'ன்னு அதிகாரிகள் உத்தரவு போட்டா, உடனே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், அந்த அதிகாரிகள் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திடுறாங்க... இதனால அதிகாரிகளும், 'நமக்கு எதுக்கு வம்பு'ன்னு கம்முன்னு இருந்துடுறாங்க பா...

''சங்க நிர்வாகிகள் அடாவடியால, இங்க வர்ற அதிகாரிகள், அடுத்த சில மாசங்கள்லயே வேற மாவட்டங்களுக்கு மாறுதல் வாங்கிட்டு ஓடிடுறாங்க... இதனால, மாவட்ட தலைநகரான சிவகங்கையில, எல்லா அரசு துறைகள்லயும் வேலைகள் மந்தமா தான் நடக்கு... தங்களுக்கான சேவைகள் சரியா கிடைக்காம மக்களும் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கல்வி அதிகாரிகள் கலக்கத்துல இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பள்ளிக்கல்வித் துறைக்கு புதிய செயலரா, இன்னசென்ட் திவ்யா என்ற பெண் அதிகாரி வந்திருக்காங்க... இவங்க, துறையில பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துட்டு இருக்காங்க... சமீபத்துல, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாங்க...

''அப்ப, கல்வித் துறை சம்பந்தமான வழக்குகள்ல, துறை செயலர் கோர்ட்ல ஆஜராகும் அளவுக்கு மெத்தனமா இருக்கக்கூடாது... அந்தந்த மாவட்டங்கள்ல முக்கிய வழக்குகளின் தற்போதைய நிலை, எந்த தேதியில விசாரணைக்கு வருது என்ற தகவல்களை எல்லாம் அதிகாரிகள் விரல் நுனியில வச்சிருக்கணும்...

''யாராவது இதுல அசால்டா இருந்து, நீதிமன்றத்தில் இருந்து, செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேர்ல ஆஜராகணும்னு உத்தரவு வந்துட்டா, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிக்கை விடுத்திருக்காங்க... இதனால, அரண்டு போன கல்வி அதிகாரிகள் பலரும், வழக்கு விவகாரங்களை தேடி தேடி படிச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us