sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

வீடு ஒதுக்கீட்டுக்கு பணம் வசூலிக்கும் தி.மு.க.,வினர்!

/

வீடு ஒதுக்கீட்டுக்கு பணம் வசூலிக்கும் தி.மு.க.,வினர்!

வீடு ஒதுக்கீட்டுக்கு பணம் வசூலிக்கும் தி.மு.க.,வினர்!

வீடு ஒதுக்கீட்டுக்கு பணம் வசூலிக்கும் தி.மு.க.,வினர்!

3


PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ஆறுதல் சொல்லாதவாளை பழி வாங்கறாங்க ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''--நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்துல, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... லோக்சபா தேர்தல் பணியில் இருந்த இவங்க,வாகன சோதனையில அலட்சியமா இருந்து, 'சஸ்பெண்ட்' ஆனவங்க ஓய்...

''இப்ப, மீண்டும் பணிக்கு வந்துட்டாங்க...ஆனா, சஸ்பெண்ட் ஆனப்ப, தன்னை பார்த்து ஆறுதல் சொல்லாத அங்கன்வாடிஊழியர்களை இப்ப பழி வாங்கறாங்க ஓய்...

''அதாவது, ஊட்டச்சத்து வார விழாவுக்கு எந்த பணமும் வழங்காம,அங்கன்வாடி பணியாளர் களை, 'உங்க சொந்த செலவுலயே எல்லாத்தை யும் செய்யுங்கோ'ன்னு சொல்றாங்க... ஆய்வுக்குபோறச்சே, ரிஜிஸ்டர்களை எழுதி முடிக்காத பெண் பணியாளர்களை, ஊட்டி யில இருக்கற தன் ஆபீசுக்கு வரவழைச்சு, சாயந்தரம்,6:00 மணி வரை காத்திருக்க வைக்கறாங்க ஓய்...

''இதனால, வீடு திரும்ப வாகன வசதி இல்லாம, வன விலங்குகள் அச்சத்துல, பெண் பணியாளர்கள் பயந்துட்டே போறாங்க...பெண் அதிகாரியின் அடாவடி பத்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் போயிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆள் பிடிக்க தான் வர்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்ட அரசு மருத்துவமனையில், பெரும்பாலான டாக்டர்கள், சரியா சிகிச்சை அளிக்கிறதே இல்ல... தங்களது கிளினிக்குக்கு ஆள் பிடிக்கிற இடமாகவே, அரசு மருத்துவமனையைபயன்படுத்துறாங்க பா...

''தோல், எலும்பு மூட்டு, குழந்தைகள்நலம், அறுவை சிகிச்சைடாக்டர்கள் பலரும், காலையில, 8:00 மணிக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு,உள்நோயாளிகள் சிலரை பார்த்துட்டு, 11:00 மணிக்கெல்லாம் நடையை கட்டிடுறாங்க...

''எல்லாருக்கும் ஏதாவது பெரிய இடத்துபழக்கம் இருக்கிறதால, சுகாதார துறை அதிகாரிகளும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதனால, கூடுதல் பணிச்சுமையால மற்ற டாக்டர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுது பா...'' என்றார், அன்வர்பாய்.

''சத்தியம் பண்ணிட்டு,இப்ப பணம் கேட்கலாமாவே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம்கூறிய பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரகாசம் தெரு, கங்கைகரைபுரம் உள்ளிட்ட பகுதியில, 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள்,சின்ன குடிசைகள் போட்டுகுடியிருந்தாவ... தேர்தல்லதி.மு.க., நிர்வாகிகள் ஓட்டு கேட்டு வந்தப்ப, அங்கிருந்த அம்மன் கோவில்ல சத்தியம் பண்ணி, 'உங்களுக்கு குடிசை மாற்று வாரியத்துல புது வீடுகள் வாங்கி தருவோம்'னு வாக்குறுதி குடுத்தாவ வே...

''இப்ப, அவங்களுக்குவடசென்னை, மகாகவிபாரதி நகர் பகுதி குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புல வீடு ஒதுக்கி, 'டோக்கன்'குடுக்காவ வே...

''ஆனா, வட்ட தி.மு.க., நிர்வாகிகள் சிலர்,வீட்டுக்கு, 8 லட்சம் ரூபாய்னு பேரம் பேசி,'2 லட்சம், 'அட்வான்ஸ்'தர்றவங்களுக்கு தான் டோக்கன்'னு, வசூல் வேட்டையில இறங்கிட்டாவ...

''அதுவும் இல்லாம, தங்களுக்கு வேண்டிய உறவினர்களை, குடிசை வீடுகள் முன் நிறுத்தி, போட்டோ எடுத்து, போலி பயனாளிகளா கணக்கு காட்டி, வீடுகளையும் வாங்கிட்டாவ... இதனால, 'சத்தியம் பண்ணி குடுத்துட்டு, இப்படி ஏமாத்துறாங்களே'ன்னு குடிசைவாசிகள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us