தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/தனுஷ் படங்களுக்கு நெருக்கடி தரும் இருவர் அணி!

தனுஷ் படங்களுக்கு நெருக்கடி தரும் இருவர் அணி!

தனுஷ் படங்களுக்கு நெருக்கடி தரும் இருவர் அணி!

4


PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெ து வடையை மென்றபடியே, “மத்திய அமைச்சராக ரகசிய பேச்சு நடத்தியிருக்கா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“தி.மு.க., கூட்டணியில இருக்கற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல், ராஜ்யசபா எம்.பி.,யா இருக்காரோல்லியோ... அவருக்கு பின்னாடி நடிக்க வந்த விஜய் முதல்வராகிட்டது, கமல் கட்சியினருக்கு விரக்தியை குடுத்திருக்கு.. .

“இதனால, மத்திய அமைச்சரவையில கமலை சேர்க்க, பிரதமர் மோடிக்கு வேண்டிய ராஜஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரியிடம், கமல் கட்சி சார்பில் சமீபத்தில் பேச்சு நடத்தியிருக்கா ஓய்...

“அதாவது, ‘2019ம் வருஷம் நடந்த லோக்சபா தேர்தல்ல, ம.நீ.ம., கட்சிக்கு 4 சதவீதம் ஓட்டுகள் கிடைச்சது... 2029ல் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவா கமல் பிரசாரம் செய்வார்... அவரை தென்சென்னை லோக்சபா தொகுதியில் நிறுத்தினா, ஜெயிக்கவும் வாய்ப்பிருக்கு... தொகுதி மறுசீரமைப்பு, அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் விவகாரங்கள்ல மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் கமல் இருக்கார்’னு விளக்கியிருக்கா... எல்லாம் சரிப்பட்டு வந்தா, மத்திய அமைச்சரா கமல் வலம் வருவார் ஓய்...” என்றார் குப்பண்ணா.

“அரசு டிரைவரை வேண்டாம்னு சொல்லிட்டாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“காட்டை காப்பாற்றும் அமைச்சரிடம், ‘சீனியர்’ உதவியாளர் ஒருவர் இருக்காரு... இவர் ஏற்கனவே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிகாரியா இருந்தப்ப, ‘டெண்டர்’கள்ல புகுந்து விளையாடி, கோடிகள்ல சம்பாதிச்சிட்டாரு பா...

“ஆட்சி மாறியதும், எப்படியோ அமைச்சரிடம் வந்து சேர்ந்துட்டாரு... டெண்டர்கள் மற்றும் அதிகாரிகள் இடமாறுதல் எல்லாத்தையும் இவர் தான், ‘டீல்’ பண்றாரு பா...

“அதுலயும் அதிகாரிகள் இடமாறுதல், ‘பைல்’களை அமைச்சரின் வீட்டுக்கே ரகசியமா எடுத்துட்டு போய் கையெழுத்து வாங்கிடுறாரு... இந்த உதவியாளருக்கு, துறையில் இருந்து, ‘இன்னோவா கிரிஸ்டா’ காரும், டிரைவரும் குடுத்திருக்காங்க பா...

“ஆனா, தன் வசூல் விவகாரங்கள் அம்பலமாகிடும்கிறதால, அரசு டிரைவரை வேண்டாம்னு சொல்லிட்டு, சொந்தமா டிரைவர் நியமிச்சிக்கிட்டாரு... ஆனா, அவருக்கான சம்பளத்தை தன் கையில இருந்து தராம, துறை அதிகாரிகளிடம் வசூல் பண்ணி குடுக்கிறாரு பா...” என்றார் அன்வர்பாய்.

“சதீஷ், இருங்க சேர்ந்து போலாம்...” என்ற அந்தோணிசாமியே, “கட்சி துவங்கிடுவாரோன்னு பயந்து நெருக்கடி தர்றதா புலம்புறாங்க...” என்றார்.

“நடிகர் தனுஷ் விவகாரமா வே...” என, பட்டென கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“ஆமா... நடிகர் தனுஷ் நடிச்ச படம் பாதியில் நின்னுட்டதால, அவர் மீது தயாரிப்பாளர் ஒருத்தர் புகார் குடுத்தார்... வாங்கிய சம்பளத்தை திருப்பி தர்றதா தயாரிப்பாளருக்கு தனுஷ் எழுதியே குடுத்துட்டாராம்...

“அதுக்கு பிறகும் புது படங்களில் நடிக்க தனுஷுக்கு தடை போடும் வகையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகியும், ‘பெப்சி’ சங்க நிர்வாகி ஒருத்தரும் கரம் கோர்த்து செயல்படுறாங்க...

“கட்சி துவங்கும் எண்ணத்துல தனுஷ் இருக்காருல்ல... அதனாலயே த.வெ.க., ஆதரவுடன், தனுஷுக்கு நெருக்கடி தர்றதா அவரது ரசிகர்கள் புலம்புறாங்க... இதனால, தன் தரப்பு நியாயத்தை விளக்கி பகிரங்கமா அறிக்கை வெளியிடலாமான்னு, நடிகர் சங்க நிர்வாகிகளுடன் தனுஷ் ஆலோசனை நடத்திட்டு இருக்காருங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

“செல்வமணி, சிவா இப்படி உட்காருங்கோ...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us