sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 மாதம் ரூ.8 லட்சம் ' கட்டிங் ' அள்ளும் அதிகாரி!

/

 மாதம் ரூ.8 லட்சம் ' கட்டிங் ' அள்ளும் அதிகாரி!

 மாதம் ரூ.8 லட்சம் ' கட்டிங் ' அள்ளும் அதிகாரி!

 மாதம் ரூ.8 லட்சம் ' கட்டிங் ' அள்ளும் அதிகாரி!

1


PUBLISHED ON : நவ 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 27, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கூ ட்டணி கட்சிகளை நோக அடிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''எந்த கூட்டணியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''மதுரை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி தராத மத்திய அரசை கண்டிச்சு, தி.மு.க., கூட்டணி சார்பில், மதுரையில் சமீபத்துல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க... ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள், செலவு எல்லாத்தையும் அமைச்சர் மூர்த்தியே ஏத்துக்கிட்டாரு பா...

''நிறைய ஆட்களை வாகனங்கள்ல அழைச்சிட்டு வந்து, பிரமாண்ட கூட்டத்தை காட்டிட்டார்... அமைச்சரா இருக்கிறவர், ஆர்ப்பாட்டங்கள்ல கலந்துக்க கூடாதுங்கிறதால, மூர்த்தி கலந்துக்கல பா...

''இதனால, மாவட்ட செயலர்களான தளபதி மற்றும் மணிமாறன் முன்னிலையில ஆர்ப்பாட்டம் நடந்துச்சு... எல்லாத்தையும் தி.மு.க.,வே ஏற்பாடு பண்ணியதால, ஆர்ப் பாட்ட மேடையில தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு நின்னு, 'போஸ்' குடுத்தாங்க பா...

''கூட்டணி கட்சி நிர்வாகிகளை மேடையில பின்னுக்கு தள்ளிட்டாங்க... இதனால, 'வாங்க வாங்கன்னு கூப்பிட்டு, இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே'ன்னு கூட்டணி கட்சியினர் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''வெறும் இடமாறுதலோட முடிச்சிக்கிடுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, ஆவடி பகுதியில் ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒரு வீட்டுல சட்டவிரோதமா நாட்டு வெடிகளை தயாரிச்சப்ப திடீர்னு வெடிச்சு, நாலு பேர் இறந்து போயிட்டாங்கல்லா... 'இந்த சம்பவத்துக்கு, ஆவடி போலீஸ் அதிகாரியின் அலட்சியம் தான் காரணம்'னு எல்லாரும் சொன்னாவ வே...

''ஆனாலும், சம்பந்தப்பட்ட அதிகாரியை, இடமாறுதல் மட்டும் ப ண்ணி காப்பாத்திட்டாவ... அதேபோல, திருவேற்காடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், அடுத்தடுத்து ரெண்டு கொலைகள் நடந்துச்சு வே...

''அந்த அதிகாரியையும் வேற ஸ்டேஷனுக்கு மாத்தி கதையை முடிச்சிட்டாவ... 'இந்த மாதிரி அலட்சிய அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி, துறைரீதியா தண்டனை தராம விடுறதால தான், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கு'ன்னு அ.தி.மு.க.,வினர் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''விஜயராஜா, ராஜா குமார் வர்றாங்க... டீ குடுங்க நாயரே...'' என்ற அந்தோணிசாமியே, ''கிட்டத்தட்ட, ஏழு வருஷமா கல்லா கட்டிட்டு இருக்காருங்க...'' என்றார்.

''எந்த அதிகாரியை சொல்றீர் ஓய்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.

''சென்னை, தேனாம்பேட்டை குடிநீர் வடிகால் வாரிய மண்டலத்தில் இருக்கிற அதிகாரியைத் தான் சொல்றேன்... இவருக்கு மாசம், 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை, 'கட்டிங்' வருதுங்க...

''ரெண்டு முறை இடமாறுதல் வந்தும், ஆளுங்கட்சி மாவட்ட புள்ளி ஒருத்தர் தயவுல, தேனாம்பேட்டை மண்டலத்துலயே நங்கூரம் போட்ட மாதிரி உட்காந்திருக்கார்... தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகளிடம் மாதாந்திர, 'மாமூல்' வசூல் பண்றாருங்க...

''பணம் தர்ற பைல்கள்ல மட்டும் கையெழுத்து போடுறதுங்கிற கொள்கையில் இருக்கிறதால, இவரது அலுவலகத்துல நிறைய பைல்கள் குவிஞ்சு கிடக் குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''என்ன மதுசூதனன்... உம்ம தொழிலுக்கு, சிற்றரசு நன்னா ஒத்தாசை பண்றாரோல்லியோ...'' என விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us