PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நேற்று அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கட்சியின் மாணவர் அணி செயலர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில், 'மாணவர்களால் மாணவர்களுக்காக ஒன்றிணைவோம்' என, பேட்ஜ் அணிந்து, அண்ணா பல்கலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
காவல் துறை அனுமதி மறுத்த பிறகும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 30க்கும் மேற்பட்டோரை, கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

