/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அங்கன்வாடி மையத்தில் திறந்திருக்கும் மின் பெட்டி
/
அங்கன்வாடி மையத்தில் திறந்திருக்கும் மின் பெட்டி
PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

காஞ்சிபுரம், ஏப். 8-
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கீழ்வெண்பாக்கம் கிராம காலனி பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மைய கட்டடம் இயங்கி வருகிறது.
இம்மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் கல்வி கற்று வருகின்றனர். இக்கட்டடம் அருகே, சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டிக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புடன்கூடிய மின் இணைப்பு பெட்டி உள்ளது.
இந்த மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. இது, கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கீழ்வெண்பாக்கம் கிராமத்தில், ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்த்து வருகின்றனர்.

