/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
வீணாகும் குடிநீர் விரயமாகும் மின்சாரம்
/
வீணாகும் குடிநீர் விரயமாகும் மின்சாரம்
ADDED : ஆக 06, 2025 12:26 AM

பகலில் எரியும் தெருவிளக்கு
திருப்பூர் வஞ்சிபாளையம் - அவிநாசி ரோட்டில் கணியாம்பூண்டி பிரிவில் பகலில் மின்விளக்கு எரிந்து வருகிறது.
- குமார், காவிலிபாளையம்.
திருப்பூர் ஜி.என்., கார்டன் பார்க் ரோட்டில் பகலில் தெருவிளக்கு எரிகிறது.
- ரவி, ஜி.என்., கார்டன்.
தெருநாய் தொல்லை
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் தனலட்சுமி லே-அவுட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.
- பெருமாள்சாமி, பாரப்பாளையம்.
சுகாதார சீர்கேடு
திருப்பூர், ஏ.வி.பி., ரோடு அனுப்பர்பாளையம் கலைவாணி தியேட்டர் அருகே குப்பை கழிவு அகற்றப்படாமல், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
- ஜெயபிரகாஷ், அனுப்பர்பாளையம்.
விபத்து அபாயம்
பல்லடம், வடுகபாளையம்புதுாரில் கடந்த, மூன்று மாதம் முன், ரோட்டோரம் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. சமீபத்தில் அந்த குழியில் குழந்தை, பெரியவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். விபத்து அபாயம் உள்ளது.
- உதயபிரகாஷ், பல்லடம்.
குப்பை கழிவு
திருப்பூர் அனுப்பர்பாளையம் ஏ.வி.பி., ரோட்டில் சாக்கடை கழிவு நீர் அருகே குப்பை கொட்டப்பட்டு, கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது.
- கார்த்திக், அனுப்பர்பாளையம்.
வீணாகும் குடிநீர்
திருப்பூர் பெரியார் காலனி டி.டி.பி., மில் பின்புறம் ரோட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.
- சுபாஷினி, பெரியார்காலனி