ADDED : ஆக 25, 2025 12:47 AM

எரியாத விளக்குகள்
மாநகராட்சி இரண்டாவது மண்டலம், நெருப்பெரிச்சலில், மாநகராட்சி வரி வசூல் மையம் அருகே, ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ராமமூர்த்தி, நெருப்பெரிச்சல்.
குப்பை தேக்கம்
வளையங்காடு தெற்கு, வ.உ.சி., நகரில், ஒரு மாதத்துக்கும் மேலாக குப்பை அள்ளப்படாமல், பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. காற்று மாசு ஏற்படுகிறது.
- பிரசாந்த் சரவணன்,திருமுருகன்பூண்டி.
n திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வடக்கு உழவர் சந்தை பகுதியில், ரோட்டில் குப்பை குவிந்துள்ளது. 40 அடி அகல ரோட்டில், 30 அடி வரை கழிவுகள் தேங்கிகிடக்கின்றன. பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்ல முடிவதில்லை. சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.
- பாலாஜி, நீதியம்மாள் நகர்.
n மாநகராட்சி முதல் வார்டு, அன்னையம்பாளையத்தில், அங்கன்வாடி மையம் அருகே, குப்பை கொட்டப்பட்டுவருகிறது. இதனால், அங்கன்வாடி குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பெற்றோர், அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.
-ராஜாமணி, அன்னையம்பாளையம்.
n மாநகராட்சி 51வது வார்டு, குறிஞ்சிநகர் விரிவு பகுதியில், குப்பை தேங்கியுள்ளது. அருகாமை பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் தொடர்கிறது. குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
- மணிகண்டன், குறிஞ்சி நகர் விரிவு.
குப்பைக்கு தீவைப்பு
வீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோட்டில், குப்பைகள் தேங்கியுள்ளன. அவற்றுக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசுபடுகிறது. அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
- சிதம்பரகுமார், கல்லாங்காடு.
தெருநாய்த் தொல்லை
பாண்டியன் நகர், அன்னை சத்யா காலனியில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், கிழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- நரேந்திரகுமார், பாண்டியன் நகர்.
வீணாகிறது குடிநீர்
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி வீதியில், குடிநீர் குழாய் உடைத்து ஒருவாரமாக தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவேண்டும்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.
போக்குவரத்து இடையூறு
மாநகராட்சி 32வது வார்டு, டி.பி.ஏ., காலனியில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டின் இருபுறமும் கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைக்கின்றனர். போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-- பழனியப்பன், ஏ.டி., வீதி.
சீர்கெட்ட சுகாதாரம்
திருப்பூர், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதி நடை மேடையில், குப்பைகள், பழைய பேனர், தண்ணீர் பாட்டில், உணவுக்கழிவுகள் சிதறி கிடக்கின்றன. சுகாதாரமில்லாததால், நடைமேடையை பயன் படுத்த முடிவதில்லை.
-மாரிமுத்து,காதர்பேட்டை.