sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

தடாகம் சாலையில் மக்கள் அவதி; கண்களை திறக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் புழுதி

/

தடாகம் சாலையில் மக்கள் அவதி; கண்களை திறக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் புழுதி

தடாகம் சாலையில் மக்கள் அவதி; கண்களை திறக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் புழுதி

தடாகம் சாலையில் மக்கள் அவதி; கண்களை திறக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் புழுதி


ADDED : ஜூலை 13, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோசமான நடைபாதை


போத்தனுார் சர்ச் ரோடு அருகில் உள்ள நடைபாதை, மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் நேரங்களில், பாதசாரிகள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது.

- பாலன், போத்தனுார்.

தார்சாலை போடுங்கள்


கே.என்.ஜி.புதுார் சாலையிலிருந்து தடாகம் சாலை சந்திப்பு வரை, சாலை தோண்டப்பட்டுள்ளது. துாசி அதிகம் எழும்புகிறது. சாலையின் இரு ஓரங்களிலும் மணல் படிந்துள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. மணலை அகற்றி சுத்தம் செய்து, தார்சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கீர்த்திகா, தடாகம்.

அசைந்தாடுது மின்கம்பம்


கோவை மத்வராயபுரம் ஊராட்சி, சிறுவாணி மெயின் ரோடு இருட்டுபள்ளம் அடுத்த குறிஞ்சி நகரில்,இரண்டு மாதங்களுக்கு முன் ஐந்து இரும்பு மின் கம்பங்கள் குழி எடுத்து நிறுத்தப்பட்டது. அக்குழிகளை மூடாமல் விட்டுச்சென்றுள்ளதால், கம்பங்கள் காற்றில் ஆடுகின்றன. அருகில் உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் உள்ளதால், எப்போது விழும் என்று அச்சமாக உள்ளது.

-கார்த்திக்,

இருட்டுபள்ளம்

துர்நாற்றத்தால் அவதி


நரசிம்மநாயக்கன் பாளையம், மெயின் ரோட்டில், வரசித்தி விநாயகர் கோவிலை ஒட்டியுள்ள பூச்சியூரிலிருந்து புதுப்பாளையம் வழியாகவுள்ள, ஹோட்டல்களில் இருந்தும், பூக்கடை வைத்திருப்பவர்களும் வியாபாரம் முடிந்தவுடன், கழிவுகளை நீர்வழிப்பாதை அடைக்கும் வகையில் அங்கேயே கொட்டிச்செல்கின்றனர். கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- மணிசங்கர், நரசிம்மநாயக்கன்பாளையம்.

இரவு நேரங்களில் அச்சம்


கோவை 24வது வார்டில், 4வது கிராஸ் சாலையில், கடந்த ஐந்து மாதங்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. கவுன்சிலரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இரவு நேரங்களில் குழந்தைகள் விளையாட அனுப்பவும், பெண்கள் நடமாடவும் அச்சமாக உள்ளது.

- நரேஷ், 24வது வார்டு

* கோவை மாநகராட்சி, 38வது வார்டு பொம்மணம்பாளையம் பாலாஜி நகர் வ.உ.சி., வீதியில் கடந்த ஒரு மாத காலமாக, மின்விளக்கு எரிவதில்லை.

- சண்முகம், பொம்மணம்பாளையம்.

அரைகுறை பராமரிப்பு பணி


கிழக்கு மண்டலம் வார்டு எண் 24, தண்ணீர் பந்தல் பிரதான ரோடு டைடல் பார்க் பின்புறம் சூயஸ் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுவரை எட்டு முறை குழாய் உடைந்து பராமரிப்பு பணி மேற்கொண்டும் பலனில்லை. பராமரிப்பு பணிகளை சரியாக செய்வதில்லை. மறுபடியும் குழாய் உடையாத வகையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

- ஜோசப், தண்ணீர் பந்தல்.

தெருவிளக்கு எரிவதில்லை


பத்மாலயா லேஅவுட் பேஸ்- 4, வார்டு 99ல் மின்கம்பம் எண் 47, கடந்த ஒரு மாதமாக மின் விளக்கு எரிவதில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், பத்மாலயா லேஅவுட்.

போக்குவரத்து நெரிசல்


பட்டேல் ரோடு ராம்நகர் சந்திப்பில், சாலை மோசமாக உள்ளது. நான்கு புறங்களில் இருந்தும் வாகனங்கள் தாறுமாறாக வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

- ராஜன், ராம்நகர்.

ஆபத்தான மின்கம்பம்


விளாங்குறிச்சி வார்டு எண் 5, பல்லவி நகர் வீதி எண் -1ல் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலே ஏறி பணிபுரியும் மின் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

-இனியன், விளாங்குறிச்சி

கழிவுநீருடன் தண்ணீர் கலப்பு


பீளமேடு துக்கினார் வீதியில் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் கழிவு நீருடன் கலந்து வருகிறது. சரியாக சாக்கடை சுத்தம் செய்யாமல் வெளியேற்றுவதால், கழிவுநீர் தாழ்வான குழாய் அமைப்பு கொண்ட வீடுகளுக்குள் சென்று, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் குடிநீர், உப்பு நீர் மற்றும் கழிவு நீர் குழாய்களில், எங்கு சிக்கல் உள்ளது என ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.

- பாரதி, துக்கினார் வீதி.






      Dinamalar
      Follow us