/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? லாலி ரோடு சிக்னல் அருகே தினமும் அவஸ்தை
/
வேகத்தடை விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? லாலி ரோடு சிக்னல் அருகே தினமும் அவஸ்தை
வேகத்தடை விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? லாலி ரோடு சிக்னல் அருகே தினமும் அவஸ்தை
வேகத்தடை விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? லாலி ரோடு சிக்னல் அருகே தினமும் அவஸ்தை
ADDED : ஆக 04, 2025 10:59 PM

படையெடுக்கும் பாம்புகள் சிங்காநல்லுார், விவேகானந்தா நகர், ராதா ராணி தியேட்டர் பின்புறம், குடியிருப்பு நடுவே உள்ள தனியார் இடம் புதர்மண்டி உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் அடிக்கடி வீடுகளுக்குள் வருகின்றன.
- முரளிதாஸ், சிங்காநல்லுார்.
விழும் நிலையில் கிளைகள் என்.எஸ்.ஆர்.ரோடு, நாதன் லே-அவுட்டில், சாலையோரம் இரண்டு பெரிய பழமையான மரங்கள் உள்ளன. காற்று அடிக்கும்போது கிளைகள் ஒடிந்து விழுகின்றன. நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தாக உள்ளது. கிளைகள் ஒயர்களில் உரசுவதால் மின் விபத்து அபாயமும் உள்ளது.
- மகேஷ் பாபு, சாய்பாபாகாலனி.
குழிகளால் தொடரும் விபத்து துடியலுார் முதல் சரவணம்பட்டி வரை உள்ள சாலையில், பல இடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த சாலையில், குழிகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலையோர கடைகளுக்கு வரும் வாகனங்களும், தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- ரங்கராஜன், துடியலுார்.
திறந்தார்கள் மூடவில்லை ஒண்டிப்புதுார், அருள்ஜோதி புரத்தில் குழாய் பதிப்பு பணிகளுக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கடந்த 15 நாட்களாக குழிகள் திறந்தநிலையில் உள்ளன. குடியிருப்புவாசிகள் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருகிறது.
- கிருத்திகா, ஒண்டிப்புதுார்.
குடிநீர் விநியோகம் நிறுத்தம் வரதராஜபுரம், 53வது வார்டு, கஸ்துாரிபாய் காந்தி நகர் பகுதியில், பாதாள சாக்கடை பணிகளுக்காக சில குழாய்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த பின்பும், குடிநீர் விநியோகம் செய்யவில்லை. பணிகளுக்காக அடைக்கப்பட்ட சாக்கடையும் சீர்செய்யவில்லை. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- செல்வராஜ், வரதராஜபுரம்.
எரியா விளக்குகள் போளுவாம்பட்டி, முட்டத்துவயல் கிராமம், நான்காவது வார்டு, பூண்டி மெயின் ரோட்டில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தில், கடந்த இரண்டு மாதங்களாக விளக்குகள் எரியவில்லை. அருகில், பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி இருப்பதுடன், காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. ஊராட்சி அதிகாரிகள், இருட்டுப்பள்ளம் மின்அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை.
- ராஜேஷ், போளுவாம்பட்டி.
அரைகுறை பணியால் அவதி ராம்நகர், சாஸ்திரி ரோடு, 67வது வார்டில், பல்வேறு பணிகளுக்காக ஒருபக்க சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின் சாலையை முறையாக சீரமைக்கவில்லை. வெறும் ஜல்லி, மண் கொண்டு குழியை மூடியுள்ளனர். மழை பெய்தால் மண் அரித்து மீண்டும் குழியாகிவிடும். பல இடங்களில் ஜல்லி பெயர்ந்து வருகிறது.
- ஸ்ரீநிவாசன், ராம்நகர்.
வேகத்தடையால் நடக்கும் விபத்து லாலிரோடு சிக்னல் அருகே, தடாகம் ரோட்டில், ஆர்.எஸ்.புரம் செல்லும் வழியில், விதிகளை மீறி வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உயரமாகவும், வளைவின்றியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனம் ஏறி, இறங்க சிரமமாக உள்ளது.
- நடராஜ், கே.கே.புதுார்.
உடைந்த சிலாப் கோணவாய்க்கால்பாளையம், 99வது வார்டு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே, பாதாள சாக்கடை சிலாப் உடைந்துள்ளது. குழந்தைகள் தெரியாமல் குழியில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. வாகனங்களும் அடிக்கடி மாட்டிக்கொள்கின்றன.
- மனோகரன், கோணவாய்க்கால்பாளையம்.
நடைபாதை ஆக்கிரமிப்பு நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, நடைபாதையை ஆக்கிரமித்து, கட்சி பேனர்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. இதையொட்டி, சாலையோரம் அதிக வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. பயணிகள் பாதிப்படைவதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
- சுப்பிரமணியம், புதுப்பாளையம்.