/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் துவக்கப்படுமா?

ADDED : ஜன 02, 2025 01:24 AM

நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் துவக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து, தி.நகர், மந்தைவெளி, வேளச்சேரி,
பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தடம் எண் 500, 577, 578 உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
சில மாதங்களாக வருமானம் இல்லையென காரணம் கூறி, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏற்கனவே இயங்கி வந்த, பேருந்துகளை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து செல்லும் அனைத்து, மாநகர பேருந்துகளிலும் பயணியர் நின்று கொண்டு, கூட்ட நெரிசலில் தான் பயணிக்கின்றனர். எனவே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்கி, பயணியர் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கிரிதரன், செங்கல்பட்டு.