/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முடியுமா என யோசித்திருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை!
/
முடியுமா என யோசித்திருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை!
முடியுமா என யோசித்திருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை!
முடியுமா என யோசித்திருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை!
PUBLISHED ON : டிச 12, 2025 03:30 AM

'போதி ஸ்கின் அண்டு ஸ்கால்ப்' என்ற பெயரில், அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் அதன் தயாரிப்புக்கான பயிற்சி பள்ளி நடத்தி வரும், சென்னையைச் சேர்ந்த ஏகம்மை விஜய்: என் சொந்த ஊர் கோவை. திருமணமாகி, கணவருடன் சென்னைக்கு வந்து விட்டேன். சிறு வயது முதலே, அழகு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம்.
முக பராமரிப்பு சிகிச்சை செய்யும் வழக்கமெல்லாம் எனக்கு இல்லை. மஞ்சள் பூசுவது, பப்பாளி அரைத்து போடுவது மாதிரியான இயற்கை வழிகளைத் தான் எப்போதும் பின் பற்றுவேன்.
சென்னை வந்த புதிதில், தண்ணீர் மாறியதால் என் முகத்தில் பருக்கள் வந்தன. அதற்கான இயற்கை தீர்வு தேடிக் கொண்டிருந்த போது தான், தாவரங்கள், மூலிகைகளை வைத்து சிலர், அழகு சிகிச்சைகள் மேற்கொள்ளும் விஷயம் தெரிய வந்தது.
அது தொடர்பான விஷயங்களை தேடித்தேடி தெரிந்து கொண்டேன். பிரிட்டன் தலைநகர் லண்டனிலும், இந்தியாவிலும் இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று, திறமையை வளர்த்து கொண்டேன்.
அதன்பின், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் வந்தது. ஆரம்பத்தில், அதில் நான் சந்தித்த சவால்கள் ஏராளம்.
அதில் முதல் விஷயம், அதிக செலவு... ஒவ்வொரு மூலப்பொருளையும் காசு கொடுத்து வாங்கி, தயாரிக்க வேண்டும். தயாரித்ததை உபயோகிக்க கொடுத்தால், நம் வீட்டில் உள்ளோரே அதை பயன்படுத்த தயங்குவர்.
அந்த பொருள் விற்பனையாகுமா, விற்பனையாகாதா என்றும் தெரியாது. வீட்டில் இருப்போர் நம்மை நம்பி அந்த பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்தாலும், அடுத்த கட்டமாக அதை எப்படி விற்பனை செய்வது என, தெரியாது.
நான் வியாபாரம் ஆரம்பித்த போதே பயிற்சி வகுப்பும் துவங்கியதால், நான் தயாரிக்கும் பொருட்களை மாணவியருக்கு கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் பலரிடமும் அதை பற்றி கூற, வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றேன்.
இரண்டு தயாரிப்புகளில் ஆரம்பித்து, இன்று, 60 தயாரிப்புகள் வரை வளர்ந்துள்ளேன். பயிற்சி வகுப்பில், 250 வகையான தயாரிப்புகளை சொல்லிக் கொடுக்கிறேன்; 70,000த்திற்கும் மேலானோருக்கு வகுப்புகள் எடுத்துள்ளேன்.
தனி ஒருத்தியாக, இந்த அழகுசாதன பொருட்கள் வியாபாரத்தை ஆரம்பித்தேன். இன்று வருஷத்துக்கு, 25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறேன். இதில் போட்டிகள் அதிகம்.
என்னால் முடியுமா என யோசித்திருந்தால், இந்த வளர்ச்சியும், அடையாளமும் எனக்கு சாத்தியமாகி இருக்காது. இது தான் நான் மற்றவர்களுக்கு சொல்லும் அறிவுரை!
தொடர்புக்கு:
91765 86714

