தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'எங்களது 3வது குழந்தை முதலீடுகள் தான்!'

'எங்களது 3வது குழந்தை முதலீடுகள் தான்!'

'எங்களது 3வது குழந்தை முதலீடுகள் தான்!'


PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுக சிறுக பணத்தை சேமித்து, இன்று கோடீஸ்வரராகி இருக்கும் பெங்களூரைச் சேர்ந்த பாலா ஹரிஷ்:

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது பள்ளி கட்டணம் செலுத்தாமல், முழு நாளும் வகுப்பறைக்கு வெளியே நின்றிருக்கிறேன். அந்த நாளில் வகுப்பில் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம், என் நினைவில் இல்லை. ஆனால், வெளியே நின்ற அவமானத்தை மட்டும் மறக்க முடியவில்லை.

படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்த பின், பெற்றோரை பெங்களூருக்கு அழைத்துக் கொண்டேன். அதன்பின் திருமணம், வீடு, பணம் சேர்ப்பது என, கவனமாக அடியெடுத்து வைத்தேன்.

வீட்டுக்கடன் வாங்கினேன்; வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு, மாத தவணைக்கே போனது. அப்போது ஓர் உண்மை புரிந்தது... வீடு, திருமணம், கல்வி எல்லாவற்றுக்கும் கடன் கிடைக்கும். ஓய்வூதியத்திற்கு கடன் கிடைக்காது என்ற பண பாடம் எனக்குள் பதிய ஆரம்பித்தது.

பின் சுதாரித்து, எல்லாவற்றையும் மாற்றினேன். ஓய்வூதிய சேமிப்பு, என் முதலீட்டின் முன்னுரிமை ஆனது. செலவுகளை கட்டுப்படுத்த நான் கையாண்ட உத்தி, ஒரு பொருளை இரண்டு முறை வாங்கும் சக்தி இருந்தால், ஒருமுறை வாங்கலாம்; இல்லையெனில் வாங்கவே கூடாது என்பது தான். ஒரே நேரத்தில் பெரிய முதலீடு செய்வதில்லை. தினசரி சிறு அளவில் முதலீடு செய்யும் நீண்ட கால உத்தியை பின்பற்றுகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் என் அமைதியான சேமிப்பு, சில கோடிகளாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் என் 15வது திருமண நாளை, குடும்பத்துடன் ஜப்பானில் கொண்டாடினோம். அப்போது என் மனைவி சிரித்தபடியே, 'ஒவ்வொரு ஆண்டும் புது புது நாடுகளுக்கு செல்ல வேண்டும்' என்றார்.

ஆனால், மனைவியின் உண்மையான கனவு பெரிது. அதாவது, பணி ஓய்வுக்கு பின், உலகம் முழுதும் உள்ள 50 நகரங்களில் வாழ வேண்டும் என்பதே. 'ஒவ்வொரு மாதமும் ஒரு நகரத்தில் வாழ வேண்டும்' என்பார். 'சாத்தியமா இது' என்றால், 'ஏன் சாத்தியம் இல்லை' என்பது தான் என் கேள்வி.

சரியான சம்பாத்தியம் மட்டும் இருந்தால் போதாது; முறையான திட்டமிடலும் இருந்தால் தான், நிதி சுதந்திரம் மிக்க வாழ்க்கையை வாழ முடியும். அத்தனை நகரங்களிலும் வாழும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, அத்தனை நகரங்களுக்கும் சென்று வர முடியும் என்பதே, என் நம்பிக்கை சார்ந்த பதில்.

என் மனைவி எப்போதுமே, 'நமக்கு இரு குழந்தைகளுடன், மூன்றாவது குழந்தை முதலீடுகள்' என்பார்; நிஜம் தான். அந்த அளவுக்கு தனி கவனம் எடுத்துக் கொண்டதால் தான், இன்று உலகச் சுற்றுலா செல்ல முடிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us