தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'மர பொம்மைகள் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வர்த்தகம்!'

'மர பொம்மைகள் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வர்த்தகம்!'

'மர பொம்மைகள் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வர்த்தகம்!'


PUBLISHED ON : செப் 16, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2026 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கான மர பொம்மைகள் விற்பனையில் களமிறங்கி, சாதித்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த, 37 வயதாகும் மோகனப்பிரியா:

நான் படிப்பை முடித்த சில மாதங்களிலேயே திருமணம் ஆனது. கணவர் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு மகன் பிறந்தபோது, அவன் விளையாடுவதற்காக மரத்தால் ஆன பொம்மைகளை பார்த்து பார்த்து வாங்குவேன்.

விளையாட்டுப் பொருட்களை தேடியபோது, பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம் இருந்தன. ஒரு சில இடங்களில் தான் மர விளையாட்டுப் பொருட்கள் கிடைத்தன; அப்படியே கிடைத்தாலும் விலை அதிகம்.

என் மகன் வைத்திருந்த பொருட்களை பார்க்கும்போது, 'இதை எங்க வாங்குனீங்க?' என்று அனைவரும் ஆச்சரியமாக கேட்டனர்; அதனால், இதையே தொழிலாக மாற்றலாம் என்று தோன்றியது.

முதலீடாக 25 ஆயிரம் ரூபாயை கணவர் கொடுத்தார்; மாமியாரும் உறுதுணையாக இருந்தார். எந்த ஊரில் எந்த பொருள் கிடைக்கும்; விலை எங்கு குறைவாக இருக்கும் என்று மூன்று மாதங்கள் ஆராய்ச்சி செய்து, 'ஆர்டர்'கள் கொடுத்தோம்.

பொருட்களை விற்பனை செய்ய, சமூக வலைதளங்களை தேர்ந்தெடுத்தேன். விளையாட்டுப் பொருட்களை நானே புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுத்து பதிவிட ஆரம்பித்தேன். புதுப்புது வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தனர். அதன்பின் கேமரா முன் நின்று, ஒவ்வொரு பொம்மையின் பயனையும் விளக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் கர்நாடக மாநிலம், சென்னபட்டணாவில் இருந்து தான் பொருட்கள் வாங்கினோம். ஒரே வடிவங்களில் ஐந்து, 10 பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்வர். அப்படி வாங்கும் பொருட்களில், சில பொருட்கள் உடனே விற்பனையாகாது. ஆரம்பத்தில் இது எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது.

அப்போது தான், நம்மிடம் இருக்கும் பொருட்களை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யாமல், அவர்களுக்கு தேவைப்படும் பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்பது புரிந்தது. நஷ்டங்களும், ஏமாற்றங்களுமே அனுபவ பாடங்கள் ஆகின.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், என் குழந்தைக்காக பாதுகாப்பான மர பொம்மைகளை தேட ஆரம்பித்த பயணம், இப்போது ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் தொழிலாக மாறி இருக்கிறது. 2,500க்கும் மேற்பட்ட ரகங்களில் என்னிடம் பொம்மைகள் இருக்கின்றன; ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

இன்றும், ஒவ்வொரு புதிய பொருளையும் வாங்கும் முன், 'இதை என் குழந்தைக்கு வாங்கி கொடுப்பேனா...?' என்று என்னையே கேட்டுக் கொள்வேன். அந்த பதில் தான், இன்றைக்கும் என் வியாபாரத்தை வழிநடத்தி வருகிறது.

தொடர்புக்கு: 99656 59302

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us