/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒரு வாரத்தில் 200 கோழி குஞ்சுகள் விற்பனை செய்கிறேன்!
/
ஒரு வாரத்தில் 200 கோழி குஞ்சுகள் விற்பனை செய்கிறேன்!
ஒரு வாரத்தில் 200 கோழி குஞ்சுகள் விற்பனை செய்கிறேன்!
ஒரு வாரத்தில் 200 கோழி குஞ்சுகள் விற்பனை செய்கிறேன்!
PUBLISHED ON : ஜன 12, 2024 12:00 AM

கோழிக் குஞ்சுகளை விற்பனை செய்து, கணிசமான லாபம் பார்த்து வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார்:
கடந்த, 30 ஆண்டு களாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். விற்பனை வாய்ப்பை பற்றி சிறிது கூட கவலைப்பட வேண்டியதில்லை.
இதில் கிடைத்த வருமானத்தில் தான், எங்கள் குடும்பம் வசதி வாய்ப்புடன் இருந்து வருகிறது. மேலும், இதில் வந்த லாபத்தில், ஒரு பகுதியை முதலீடு செய்து, கட்டுமான தொழில் துவங்கி இருக்கிறேன்.
எனக்கு சிறு வயதில் இருந்தே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். 10ம் வகுப்பு முடித்ததும் நாட்டுக்கோழி, வான்கோழி, புறா, ஆடு வளர்ப்பில் ஈடுபட துவங்கி விட்டேன். துவக்கத்தில் தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் தான் வளர்த்துக்கிட்டு இருந்தேன். இவற்றில் நிறைய லாபம் சம்பாதித்தேன்.
கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன், என் பண்ணையை, வாண்டையார் இருப்பு என்ற கிராமத்திற்கு மாற்றினேன். தற்போது, 115 நாட்டுக்கோழிகள் மட்டும் வளர்த்து வருகிறேன்.
இதில், 100 தாய்க்கோழிகளும், 15 சேவல்களும் இருக்கின்றன. எல்லாமே சிறுவிடை ரகம். மற்ற நாட்டுக்கோழி ரகங்களை விட, இது அதிக எண்ணிக்கையில் முட்டைகள் இடும்; குஞ்சுகள் உற்பத்திக்கும் ஏற்றது.
குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறேன். இன கலப்பில்லாத சிறுவிடை ரகக் கோழி குஞ்சுகளுக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இருக்கு.
ஒரு ஆண்டிற்கு ஒரு தாய்க்கோழி வாயிலாக, சராசரியாக, 90 முட்டைகள் கிடைக்கும். 100 தாய்க்கோழிகள் வாயிலாக, ஆண்டிற்கு, 9,000 முட்டைகள் கிடைக்கும்.
மாதத்திற்கு, 750 முட்டைகள் வீதம் இன்குபேட்டரில் வைத்து குஞ்சுகள் பொரித்தோம் எனில், இழப்புகள் போக, 700 குஞ்சுகள் கிடைக்கும்.
இதில், 1 நாள் வயதுடைய ஒரு கோழிக்குஞ்சு, 60 ரூபாய் என விற்பனை செய்கிறோம். இதன் வாயிலாக, மாதத்திற்கு, 42,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
தீவனம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் போக, 34,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டிற்கு, 4.08 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
இறைச்சிக் கோழிகள் உற்பத்தியை விட, 1 நாள் வயதிலேயே கோழிக் குஞ்சுகளை விற்பனை செய்வதால், அதிக இடம் தேவையில்லை. தீவனத்திற்கும் செலவு செய்ய வேண்டியதில்லை.
நோய் பாதிப்புகளாலோ, உயிரினங்களாலோ இழப்புகளைச் சந்திக்க வேண்டியதில்லை.
வாரத்திற்கு, 200 கோழிக் குஞ்சுகள் வீதம் விற்பனை செய்கிறேன். இதனால், மாதம் முழுக்க கையில் பணம் புழங்கிட்டு தான் இருக்கு.
தொடர்புக்கு:
94421 56505.

