/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஐடியாக்கள் இருந்தால் ஒவ்வொரு நொடியும் புதுசு தான்!
/
ஐடியாக்கள் இருந்தால் ஒவ்வொரு நொடியும் புதுசு தான்!
ஐடியாக்கள் இருந்தால் ஒவ்வொரு நொடியும் புதுசு தான்!
ஐடியாக்கள் இருந்தால் ஒவ்வொரு நொடியும் புதுசு தான்!
PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

'ராம் வித் ஜானு' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தன் கணவருடன், 'டிரெண்ட்' ஆகி, தற்போது பிசினசிலும் கால் பதித்துள்ள கீர்த்தி:
'மேக்கப் ஆர்ட்டிஸ்ட், யு டியூபர்' என இயங்கி வந்தேன். தற்போது, கணவருடன் இணைந்து, 'தி லேபிள் ஐ' என்ற பெயரில், புடவைகள் டிசைன் செய்யும் பிராண்டை துவங்கியுள்ளேன்.
நாங்கள் இருவரும், 'லவ்' பண்ணிட்டிருந்த, 'டைம்' அது. ராம், ஒரு கால் சென்டர்ல வேலை பார்த்துட்டு இருந்தாரு. நான் பார்ட் டைம் வேலைக்கு போயிட்டிருந்தேன்.
பிசினஸ் ஆரம்பித்து ஜெயிக்கணும்னு இருவரும் ஆசைப்பட்டோம். வடமாநிலங்களில் இருந்து துணிகள் வாங்கி விற்பது தான், எங்கள் பிசினஸ் பிளான்.
நண்பர்களிடம் புகைப்படம் காட்டி ஆர்டர் வாங்குவேன். ராமோட சம்பள பணத்தை முதலீடு செய்து துணிகளை வர வைத்தோம்.
ஆர்டர் கொடுத்த நிறைய நண்பர்கள், துணி வந்ததும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
எதிர்பார்க்காத அந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வரவே எங்களுக்கு பல மாதங்கள் ஆனது.
அந்த நேரத்தில் நான் யு டியூப் துவங்கி, வீடியோ போட ஆரம்பித்தேன். எனக்கு மேக்கப் ரொம்ப பிடிக்கும்.
பர்சனல் மேக்கப் வீடியோக்கள் தான் என்னோட கன்டென்ட். அந்த வீடியோக்கள் பார்த்து, பலர் பிரைடல் மேக்கப் பண்றதுக்கு கேட்டாங்க.
பிரைடல் மேக்கப் கற்று தொழிலை ஆரம்பித்தேன். அப்படியே வீட்டில் காதலை சொல்லி, 'ராம் வித் ஜானு' சேனலையும் ஆரம்பித்தோம்.
சேனல் வாயிலாக வருமானம் வர ஆரம்பித்தது; கொஞ்சம் செட்டில் ஆனோம். யு டியூப் எங்களோட பிரதான வேலையாக மாறினாலும், பிசினஸ் பிளானும் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு.
எனக்கு பேஷன்ல ஆர்வம் அதிகம். அதனால், துணி சார்ந்த பிசினஸ் ஆரம்பிக்கிறது தான் எங்கள் ஆசையாக இருந்தது. 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் பிசினஸ் ஆரம்பித்தோம்.
துணிகளை ஓரிடத்திலும், பிரின்ட் அச்சுகளை ஓரிடத்திலும் வாங்கினோம். நாங்கள் கேட்கும் கலரில் டையிங் செய்து, கேக்குற டிசைனை பிரின்ட் பண்ணி விற்பனைக்கு தயார் பண்றது தான் எங்கள் பிளான்.
இப்போது புடவைகளுக்கு தனியாக, டிரஸ்சுக்கு தனியாக பிராண்ட் வைத்துள்ளோம். புடவையில் எந்த டிசைன், எந்த கலரில் எப்படி வரணும் என நான் சொல்லிடுவேன்.
கூடுதலாக டிசைனர்களும் சப்போர்ட் செய்வாங்க. டிரெண்ட்ல என்ன இருக்குன்னு பார்த்து பார்த்து பண்றோம்.
பல போராட்டங்களுக்கு பின் இப்போது தான் எங்கள் பிராண்ட் மக்களிடம் ரீச் ஆக ஆரம்பிச்சிருக்கு. புது ஐடியாக்கள் இருந்தால் ஒவ்வொரு நொடியும் புதுசு தான்.

