sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கோவையின் 'கில்மா' பிரியாணி!

 கோவையின் 'கில்மா' பிரியாணி!

 கோவையின் 'கில்மா' பிரியாணி!


PUBLISHED ON : ஏப் 05, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026 12:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள, சோழா ஹோட்டல் உரிமையாளரான கார்த்திக்:

கல்லுாரி மாணவ - மாணவியர் தான் அதிகளவில் எங்கள் உணவகத்துக்கு வருவர். அவர்கள் அடிக்கடி, 'அண்ணே, இந்த குஸ்காவையும், பிரியாணியையும் தினமும் சாப்பிடுகிறோம்.

'இது, கோவையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். எங்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து தாருங்கள்' என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். அது தான், 'கில்மா பிரியாணி' உருவாக காரணம்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்கு சென்று பரிசோதனை முயற்சியாக, பிரியாணி சாதத்தை மட்டும் தனியாக எடுத்து, அதில் முட்டையை சேர்த்தேன்.

அத்துடன், எலும்புகள் இல்லாத பொரித்த சிக்கன் துண்டுகளையும், வதக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய மல்லித் தழைகளையும் சேர்த்து ஒரு புதிய கலவையை உருவாக்கினேன்; அது தான் கில்மா பிரியாணி; சுவை புதிதாகவும், வாசனை அருமையாகவும் இருந்தது.

கில்மா பிரியாணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், அதன் வித்தியாசமான சுவையும், தரமும் தான்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் முதல் மசாலாக்கள் வரை, அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறோம்.

இந்த கலவைக்கு ஒரு தனித்துவமான பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தேன். 1990களில் இளைஞர்களிடையே, 'கில்மா' என்ற வார்த்தை பிரபலமாக இருந்தது.

அந்த பெயரே சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். எதிர்பார்த்தபடியே, அந்த பெயரும், சுவையும் இளைஞர்களை காந்தம் போல ஈர்த்தது. இந்த சுவை ஒரு உணவகத்தோடு நின்றுவிடவில்லை; கோவை தெருக்கள் முழுதும் பல உணவகங்களிலும் பிரபலமானது.

சாதாரண பிரியாணிக்கும், இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசமே மசாலா தான். கில்மா பிரியாணியில், ஏற்கனவே பொரித்த சில்லி சிக்கனை, நேரிடையாக சாதத்துடன் சேர்த்து கிளறுவதால், ஒவ்வொரு கறித்துண்டிலும் அந்த சுவை இருக்கும்.

முக்கியமாக சீரக சம்பா அரிசியும், சில்லி சிக்கன் மசாலாவும் சேரும் போது, அது தனித்துவமான சுவையை தருகிறது.

கடந்த 1990களில், 40 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கில்மா பிரியாணி, இப்போது, 90 முதல் 150 ரூபாய் வரை பல்வேறு உணவகங்களில் அமோகமாக விற்பனை செய்யப் படுகிறது.

பிரியாணி தயாரிப்பில் நான் செய்த ஒரு முயற்சி, இன்று எல்லா இடங்களிலும் பரவியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

'வெளிநாடுகளிலும் கூட கில்மா பிரியாணி கிடைக்கிறது' என்று சிலர் சொல்கின்றனர். அது பெருமையாகவும் உள்ளது. மக்களுக்கு வித்தியாசமான பிரியாணி அனுபவம் கிடைப்பதை விட, எங்களை போன்றவர்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கிறது!

 பலவித வாழைப்பழங்களால் லாபம்!




தமிழக வேளாண்மை துறையில் பணியாற்றி, ஓய்வுபெ ற்ற புதுச்சேரி, பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த ராஜவேணு கோபால்:

நாங்கள் விவசாயக் குடும்பம். அப்பா தான், விவசாயத்தை கவனித்தார். நான் பி.யு.சி., படிக்கும் போதே, தமிழக வேளாண்மை துறையில் எனக்கு வேலை கிடைத்தது.

வேளாண் உதவி அலுவலர், விதை அலுவலர் போன்ற பல பதவி உயர்வுகளை பெற்றேன். 2009ல் ஓய்வுபெற்ற பின், முழுநேர விவசாயியாக மாறி, இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்.

எனக்கு, 3.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. அரை ஏக்கரில் உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கிறேன். 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்கிறேன்.

அதிக இடைவெளி கொடுத்தால், மரங்கள் நன்றாக திடகாத்திரமாக வளர்ந்து, உறுதித்தன்மை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும். போதுமான சூரிய வெளிச்சமும் கிடைக்கும்.

பூச்சி, நோய் தாக்குதல் குறைய வாய்ப்பிருக்கும். சோதனை முயற்சியாக அதிக இடைவெளி கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு செய்து, இடைவெளி விட்டு, கன்றுகள் நடவு செய்தேன். நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான பலன் கிடைத்தது.

இதனால், அதிக இடைவெளி கொடுக்கும் முறையை இப்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். பலமான காற்று வீசினாலும், மரங்கள் சாய்வதில்லை. உயரமான வாழை குலைகள் உருவாகி, அதிக காய்கள் கிடைக்கின்றன. மேலும், ஆண்டு முழுக்க ஊடுபயிர்கள் சாகுபடி செய்தும், கணிசமான வருமானம் பார்க்க முடிகிறது.

முதல் இரண்டு வரிசை பூவன், அடுத்த இரண்டு வரிசை ரஸ்தாளி, அடுத்த இரண்டு வரிசை மொந்தன், அடுத்த இரண்டு வரிசை கற்பூரவள்ளி என்று மாறி, மாறி பயிர் செய்கிறேன். குலைகளாக விற்பனை செய்வதை விடவும், அதில் இருந்து பழங்களை பிரித்தெடுத்து, வீட்டு வாசலில் விற்பனை செய்வதால், லாபம் அதிகம் கிடைக்கிறது.

மேலும், இயற்கை அங்காடிகள் நடத்துவோருக்கும், மொத்த விற்பனையில் குலைகளாக விற்பனை செய்து வருகிறேன். ஒரு ஏக்கரில் வாழை சாகுபடி செய்தால், 400 குலைகள் கிடைக்கும்.

ஒரு குலைக்கு சராசரியாக, 500 ரூபாய் வீதம் 400 குலைகள் விற்பனை செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வருமானமும், ஊடுபயிர்கள் சாகுபடி வாயிலாக ஆண்டுக்கு, 80,000 ரூபாய் வருமானமும் கிடைத்து வருகிறது.

ஆ க, ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் வாழை மற்றும் ஊடுபயிர்கள் சாகுபடி வாயிலாக, 2.80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 1.60 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. 3 ஏக்கரில் மொத்தம், 4.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

தொடர்புக்கு:

90035 48502.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us