sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ உலக அரங்கேறும் பவானி ஜமுக்காளம்!

 உலக அரங்கேறும் பவானி ஜமுக்காளம்!

 உலக அரங்கேறும் பவானி ஜமுக்காளம்!


PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக அரங்கேறும் பவானி ஜமுக்காளம்!



தமிழக வந்தவாசியை பூர்வீகமாக கொண்டு, துபாயில் வசிக்கும் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா: கட்டடக்கலை பயின்று, தமிழகத்தில் ஊடகத்துறையில், 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், சீனாவில் ஆடை வடிவமைப்பு பயின்றேன். என் பாரம்பரிய வேர்களை அடிப்படையாக கொண்டு, தெருக்கூத்து கருப்பொருளில் நான் உருவாக்கிய ஆடைகள், லண்டன் ஆடை அணிவகுப்பில் புகழ் பெற்றன.

சென்னிமலை நெசவாளர்களுடன் இணைந்து, ஆடை உற்பத்தியை மேற்கொள்கிறேன். பவானி ஜமுக்காளம் வெறும் ஒரு தரை விரிப்பு மட்டுமல்ல; அது ஒரு உயர்தர, பாரம்பரிய கைவினை பொருள். 19ம் நுாற்றாண்டில் இருந்து கையால் நெய்யப்படும் பாரம்பரியமும், அதன் பச்சை - சிவப்பு - மஞ்சள் கோடுகள் என, உலகில் எங்கு வைத்தாலும், 'இது பவானி ஜமுக்காளம்' என்ற தனித்துவ அடையாளமும் உறுதியும் கொண்டது.

என் முதல் முயற்சியாக, பவானி ஜமுக்காளத்தை கொண்டு, தரமான கைப்பைகள் உருவாக்க முடிவு செய்தேன். 2020ம் ஆண்டு, 20 கைப்பைகள் கொண்ட முதல் தொகுப்பை அறிமுகப்படுத்தினேன்.

லண்டன் ஆடை அணிவகுப்பின், 10வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு அழைப்பு வந்தது. இதன் வாயிலாக பவானி ஜமுக்காளத்திற்கு உலக அரங்கில் கதவு திறக்கப்பட்டது. பேஷன் மேடை அழகுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள உழைப்பு மிக முக்கியம்.

எனவே, நடிகர்களுக்கு கிடைக்கும் கவனம் போல, நெசவாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால், அந்த கலையை செய்யும் அனைத்து நெசவாளர்கள் சார்பாக ஒருவரை மேடையேற்ற விரும்பினேன்.

பவானி ஜமுக்காளம் தயாரிக்கும் ஒரு நெசவாளரை அறிமுகப்படுத்த நினைத்த போது தேர்வானவர் தான், ஈரோடு பெரியமோளபாளையத்தை சேர்ந்த, 69 வயதான சக்திவேல் பெரியசாமி அய்யா.

ஜமுக்காளத்தில் உள்ளது போன்ற வடிவங்களுடன் கூடிய ஆடைகளுடன் மாடல்கள் நடந்து வர, நிகழ்வின் ஆன்மாவாக விளங்கிய, சக்திவேல் அய்யா வெள்ளை வேட்டி - சட்டையில், ஜமக்காள அங்கவஸ்திரத்துடன், கையில் ராட்டையை ஏந்தி, 'இது எனக்கானது மட்டுமல்ல; எல்லா நெசவாளர்களுக்காக' என்று மேடையை கலக்கினார்.

பவானி ஜமுக்காளத்தை புகழ் பெற்ற வர்த்தகமாக மாற்றுவதே என் கனவு. இந்த நிகழ்வு நடந்த லண்டனின், 'டெவின்ஷயர் ஸ்கொயர்' என்ற இடம், 18ம் நுாற்றாண்டில் வங்காள நெசவாளர்களின் ரத்தமும், வியர்வையும் கலந்து நெய்யப்பட்ட, கம்பளி துணிகளை சேமித்த கிடங்காக இருந்தது.

அந்த இடத்தில், நம் உழைப்பு அக்காலத்தில் மிகவும் இழிவாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று அதே மண்ணில், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, நம் கைத்தறி கலைஞர்களின் திறமை உச்சி முகரப்

பட்டிருக்கிறது.



நம் சம்பளம் நம்மை மேம்படுத்தும்!



ஏழை பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து வரும், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சோழனுார் கிராமத்தைச் சேர்ந்த, 24 வயதான சுருதிகா:

அப்பா, கூலி வேலை செய்கிறார்; அம்மா, அரசு உதவி பெறும் பள்ளியில் சமையல் உதவியாளர். அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டு வரும் பணம், குடும்பத்தை நடத்தவே போதாது. அதனால், குடும்ப கஷ்டத்தை உணர்ந்து நன்கு

படித்தேன்.

உடுமலைப்பேட்டை அரசு கலை கல்லுாரியில், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்தேன். பகுதி நேர வேலைகள் பார்த்தபடியே தான் கல்லுாரி செல்வேன். படிப்பை முடித்த ஐந்தாவது மாதத்தில், பொள்ளாச்சியில் உள்ள மழலையர் துவக்க பள்ளியில், தற்காலிக ஆசிரியை பணியில் சேர்ந்தேன்.

முதல் மாத சம்பளம், 5,000 ரூபாய் வாங்கியபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மாதாமாதம் சம்பளம் வர ஆரம்பித்ததும், வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை கிடைத்தது. அரசு பணி தான் என் இலக்கு. அதற்கான தீவிர பயிற்சியில் இருக்கிறேன்.

எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, வேலைக்கு செல்லும் குழந்தைகள் பலர் இருந்தனர். அதனால், நான் மற்றும் என் உறவுக்கார சகோதரர்கள் சேர்ந்து, 'தமிழ்க்கூடு' என்ற மாலை நேர இலவச பாடசாலையை எங்கள் ஊரில் துவக்கினோம்; இதற்கான சிறு கட்டடத்தை தாய்த்தமிழ் துவக்க பள்ளியின் தாளாளர் கட்டித் தந்தார்.

இப்போது, பிளஸ் 2 மாணவர்கள் வரை இங்கு படிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து, தன்னம்பிக்கையும் ஊட்டணும்; ஆளுமையை வளர்க்க வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

அதனால், தமிழ்க்கூட்டில் படிக்கிற ஒவ்வொரு மாணவரையும் பல நிகழ்வுகளில் பங்கு பெற வைக்கிறோம். அவர்களை மேடையேற்றி பேச்சு, நடனம், பாடல், நாடகம், தற்காப்பு கலைகள் என திறமைகளை வெளிப்படுத்த வைக்கிறோம். மிகவும் முக்கியமாக சமத்துவம், சமூக நீதி குறித்தும் சொல்லிக் கொடுக்கிறோம்.

கல்வி அறிவும், அதன் வாயிலாக நமக்கு கிடைக்கிற பொருளாதார பலமும், நம் சுயமதிப்பை உயர்த்தும். வேலை என்பது சம்பளத்தோடு மட்டும் சுருங்கி விடக்கூடாது.

குடும்ப பொறுப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்மால் முடிந்த சமூக பொறுப்புகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அன்றாட செய்திகள், புத்தகங்கள் என நம் அறிவை விசாலமாக்கிக் கொள்ளலாம். பயணங்கள், பொழுதுபோக்குகள் என நம் வாழ்க்கையை எளிதாக்கி கொள்ளலாம்.

தேவைக்கு அதிகமான காசு கையில் வர ஆரம்பிக்கும்போது, சேமிப்பு, முதலீடு என விபரமுடன் செய்யலாம். இப்படி நம் கையில் கிடைக்கும் சம்பளம், எல்லா வகையிலும் நம்மை மேம்படுத்துவதாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us