/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
டீயில் செயற்கை நிறமூட்டிகளை சேர்ப்பதில்லை!
/
டீயில் செயற்கை நிறமூட்டிகளை சேர்ப்பதில்லை!
PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

தைவான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டு, சென்னை, வேளச்சேரியில், 'தைவான் மாமி கபே' நடத்தி, விதவித மான பிளேவர்களில் டீ விற்பனை செய்யும், தெரெசா ஹூ: தேநீர் கலாசாரத்திற்கு மிகவும் புகழ் பெற்றது கிழக்கு ஆசியா என்று எல்லாருக்குமே தெரியும். 1980களில் அங்கே, 'பப்பிள்ஸ்' டீ என்று மிகவும் பிரபலமாக இருந்தது.
டீயுடன் சில சிரப்களை சேர்த்து காக்டெயிலாக ஷேக் செய்யும்போது, மேலே பப்பிள்ஸ் உருவாகும். அதனால்தான் அதற்கு, 'பப்பிள்ஸ்' டீ என்று பெயர்.
பிற்காலத்தில், அந்த பப்பிள்ஸ் டீயில், டாபியோகா முத்துகளை சேர்த்துதால் அதற்கு, 'பொப்பா' டீ என்று பெயர்.
நான் வளர வளர, தைவான் நாட்டிற்கே உரிய இதுபோன்ற டீ ரெசிப்பிகள் மீது வெளிநாட்டினருக்கும் அதிக ஈடுபாடு ஏற்படுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, லண்டனில் இருந்த போது அங்குள்ள மக்கள் இதை மிகவும் விரும்பினர்.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, இங்கு சாலையோர டீக்கடைகளை தவிர வேறு ஒன்றுமே இல்லை.
ஆனால், இப்போது நிலைமை அப்படி கிடையாது; விதவிதமான உணவுகள் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.
தேயிலையின் தரத்தைப் பொறுத்தே டீயின் தயாரிப்பு அமையும். நீலகிரியில், விதவிதமான தரமான, 'ஆர்கானிக் ஊலாக் டீ, கிரீன் டீ, பிளாக் டீ' உள்ளிட்டவை உற்பத்தியாகின்றன.
அத்துடன் சேர்த்து, தைவானில் இருந்து டாபியோகா முத்துகளை வரவழைத்து, பலவிதமான டீ ரெசிப்பிகளை செய்து வருகிறோம்.
டீக்கு எப்போதும் பிரெஷ்ஷான பால் பொருட்களை பயன்படுத்துகிறோம். தவிர செயற்கை நிறமூட்டிகளை நாங்கள் தவிர்த்து விடுவோம்.
எனவே, வாடிக்கையாளர்கள் மத்தியிலும், இந்த டீக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
டீ மட்டுமல்லாமல், 'ஸ்லஷ்' எனப்படும் ஜூஸ் வகைகளும் உள்ளன. ஸ்டிராபெர்ரி, சாக்லேட் என்று எக்கச்சக்க வெரைட்டிகளும் எங்களிடம் உள்ளன.
தொடர்புக்கு: 78450 53909

