/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சவுக்கு சாகுபடியில் 60,000 செலவில் ரூ.40 லட்சம் லாபம்!
/
சவுக்கு சாகுபடியில் 60,000 செலவில் ரூ.40 லட்சம் லாபம்!
சவுக்கு சாகுபடியில் 60,000 செலவில் ரூ.40 லட்சம் லாபம்!
சவுக்கு சாகுபடியில் 60,000 செலவில் ரூ.40 லட்சம் லாபம்!
PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

உவர் மண், உப்பு நீரிலும் லாபம் தரும் சவுக்கு சாகுபடியை வெற்றிகரமாக செய்து வரும், திருப்பூர் மாவட்டம், லிங்கமநாயக்கன் புதுாரைச் சேர்ந்த சேர்ந்த சித்ரா கிரிராஜ்:
என்னோட பூர்வீகம், பொள்ளாச்சியில் இருந்து, 20 கி.மீ.,யில் உள்ள ராமச்சந்திரபுரம் கிராமம். நான் எம்.ஏ., பொருளாதாரம் படிச்சிருக்கேன்.
எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். லிங்கமநாயக்கன் புதுாரில் உள்ள இந்த 30 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வருவது தெரிந்து, வாங்கினோம்.
எங்க நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கிடைக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம். நிலமும் உவர் தன்மை கொண்டது.
இதில் தென்னை சாகுபடி செய்தால், வெற்றிகரமான விளைச்சல் கிடைக்காது. அதனால் தென்னை வேண்டாம், சவுக்கு சாகுபடி செய்யலாம்னு, என் கணவரும், மகனும் சொன்னாங்க.
வெற்றி அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம்' பற்றி தெரியவந்தது. அந்த அமைப்பினரே நாற்றுகளை கொண்டு வந்து நட்டும் கொடுப்பாங்க. நிலத்தோட உரிமையாளர் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை... பராமரிச்சாலே போதும்.
அவங்களே, 50,000 சவுக்கு நாற்றுகளை கொண்டு வந்து இறக்கினாங்க. எதுக்கும் கட்டணம் வாங்கவில்லை. ஓர் ஆச்சரியமான விஷயம் என்னென்னா, நாற்றுகள் நடும்போது எந்த உரமும் கொடுக்கவில்லை. அதுக்கு பிறகும் உரம் கொடுக்கவில்லை.
நாற்றுகள் நடவு செய்து, ஒரு ஆண்டுக்கு பின், சவுக்கு மரங்களோட தண்டுப் பகுதியில் காயம் ஏற்படாத வகையில், ரொம்ப கவனமாக பக்க கிளைகளை வெட்டி கவாத்து செய்தோம்.
மூன்றே ஆண்டில் எங்கள் சவுக்கு தோப்பு, நல்ல அடர்ந்த காடு மாதிரி மாறியதால், பலவிதமான உயிரினங்கள் தங்குமிடமாகவும் மாறியது.
நான்காவது ஆண்டு, ஒவ்வொரு மரமும் திரட்சியாக பெருத்து, 20 - -30 அடி உயரத்துக்கு வளர்ந்துடுச்சு. எங்கள் தோப்பில் நல்ல தரமான சவுக்கு மரங்கள் விளைஞ்ச விஷயம் தெரிஞ்சு, எங்களை அணுகினாங்க.
அவங்களே ஆட்களை வச்சு வெட்டி, எடை போட்டு எடுத்துட்டு போயிட்டாங்க. எனக்கு அறுவடை கூலி, போக்குவரத்து செலவு எதுவும் கிடையாது. மொத்தம் 20 ஏக்கரில், 580 டன் மகசூல் கிடைச்சது.
டன்னுக்கு, 7,000 ரூபாய் வீதம் 580 டன்னுக்கும், 40 லட்சத்து 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. கவாத்து செய்த செலவு போக, 40 லட்சம் ரூபாய் லாபமாக கிடைச்சது.
இன்னும் சில மாதங்கள் கழிச்சு, 30 ஏக்கர்லயுமே சவுக்கு பயிர் பண்ணலாம்னு இருக்கேன். அப்ப, அடியுரமாக மாட்டு எரு, கோழி எரு, இலை தழைகள் எல்லாம் கொடுக்கலாம் என்ற யோசனையில் இருக்கேன்.
தொடர்புக்கு:
98940 68292.

