sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

புடவை கட்டி கரகம் ஆடுவதற்கு அனுமதிச்சா நல்லது!:ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளிநாடு டூர்!

/

புடவை கட்டி கரகம் ஆடுவதற்கு அனுமதிச்சா நல்லது!:ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளிநாடு டூர்!

புடவை கட்டி கரகம் ஆடுவதற்கு அனுமதிச்சா நல்லது!:ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளிநாடு டூர்!

புடவை கட்டி கரகம் ஆடுவதற்கு அனுமதிச்சா நல்லது!:ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளிநாடு டூர்!


PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காண்பவர்களுக்கு பொழுதுபோக்கான கலையாக தெரியும் கரகாட்டம், அதை ஆடுவோருக்கு வலி மிகுந்த வாழ்வாதாரம் என்பதே நிதர்சனம். அவர்களில் ஒருவரான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்துாரி கலியபெருமாள்:

என் 8 வயதில் துவங்கிய கலைப்பயணம், 42 வயது தாண்டியும் தொடர்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாஞ்சூர் கிராமத்தில் பிறந்தேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடனம் ரொம்ப பிடிக்கும்.

பள்ளி நிகழ்ச்சியில் முதல் முறையாக பரதநாட்டியம் ஆடியதை பார்த்து எங்க ஆசான் நடேசன் ஐயா, 'யார் இந்த பொண்ணு... நல்லா ஆடுதே'ன்னு விசாரிச்சு எங்க வீட்டுக்கு வந்தார்.

எங்கப்பாகிட்ட, என்னை அவங்களோட கரகம் கலைக் குழுவில் சேர்த்துவிடச் சொல்லி கேட்டார்.

வீட்டில் மற்ற யாருக்கும் விருப்பமில்லை என்றாலும், அப்பா மட்டும் சம்மதித்து, அந்த குழுவில் சேர்த்து விட்டார். கலைக்குழுவில் சேர்ந்த பின் தான் கரகம் ஆடக் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்தில் படிப்பை தொடர முடியாமல் நிறுத்திட்டேன். கரகத்தை மட்டும் விடவில்லை.

எங்க குழுவில் தவில் வாசிச்சிட்டிருந்த கலிய பெருமாளை, என்னோட, 15 வயதில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய இடங்களில் நிறைய நிகழ்ச்சிகளுக்கு போவோம். எங்களுக்கு ஒரு பொண்ணும், பையனும் பிறந்தாங்க.

விருதுகள், பாராட்டுகள் என, சந்தோஷத்துக்கான விஷயங்கள் ஒரு பக்கம் கிடைச்சாலும், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமே போராட்டமா மாறுச்சு. எங்களுக்கு திருவிழா காலங்களில் மட்டும் தான் வேலை இருக்கும். அதை வைத்து தான் அந்த ஆண்டு முழுக்க குடும்பத்தை நடத்துவோம்.

எப்போது திருவிழாக்கள் வரும் என, எல்லா கலைஞர்களும் எதிர்பார்த்திட்டிருப்போம். அப்படியே திருவிழாக்கள் வந்தாலும், கேலி கிண்டல்கள் என, மனசைக் காயப்படுத்தற விமர்சனங்கள், விஷயங்கள் நடக்கும்.

அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்க முடியுமா... 'எங்க வயித்துப் பொழப்புக்கு ஆடுறோம்... இப்படியெல்லாம் பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டு கடந்து போயிடுவோம்.

கொரோனா வந்த ஒரு ஆண்டிலேயே சுகர் அதிகமாகி என் கணவர் இறந்துட்டாரு. அவர் போன பின் நிகழ்ச்சிகளுக்கு போகாம இருந்தேன்.

எப்பவாவது, அரசாங்கத்துல இருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி களில் ஆட வாய்ப்பு வரும். அந்த நிகழ்ச்சிகளுக்கு ரொம்ப சந்தோஷமாக புடவை கட்டிட்டு ஆடுவேன்.

கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் குட்டை பாவாடை அணிந்து ஆட வேண்டியிருக்கும். கேலி கிண்டல்களை பொறுத்துட்டு போகணும்.

அதுவே அரசு நிகழ்ச்சிகளில் சேலை கட்டி ஆடும்போது இந்த பிரச்னையே இருக்காது. அரசு நிகழ்ச்சி போல எல்லா நிகழ்ச்சிகளிலும் புடவை கட்டி ஆட அனுமதிச்சா நல்லா இருக்கும்னு தோணும்.

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் வெளிநாடு டூர்!


'யம்மி டம்மி ஆர்த்தி' என்ற பெயரில், இணையத்தில், 13 ஆண்டுகளாக சமையல் சார்ந்த பிளாக் ஒன்றை நடத்தி வரும், நாகர்கோவிலை சேர்ந்த சமையல்கலைஞர் ஆர்த்தி சதீஷ்:

வெற்றி என்பது ஓரிரவில் கிடைக்கக்கூடியது அல்ல, அதற்கு தொடர் உழைப்பும் நிலைத்து நிற்கும் தன்மையும் மிக அவசியம்.

இந்த இரண்டு முக்கியமான பண்புகள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.

கடந்த, 13 ஆண்டுகளாக சமையல் துறையில் இயங்கிவரும் என்னை, 'யம்மி டம்மி ஆர்த்தி' என்று கொண்டாடுகின்றனர் இணையவாசிகள். பேஸ்புக்கில் மட்டும், 14 லட்சம், 'பாலோயர்ஸ்' உள்ளனர்.

'யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களிலும் செம ஹிட். குறிப்பாக, என், 'கிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி' வீடியோக்கள் இளம் அம்மாக்களின், 'பேவரைட்'டாக உள்ளது.

பிளாக்கில் சமையல் ரெசிப்பிகளை பதிவிட துவங்கி, மூன்று ஆண்டுகள் கழித்தே முதல் பேமென்ட் வந்தது.

சிறிய தொகை தான் என்றாலும், என் தொடர் உழைப்புக்கான அங்கீகாரம் என்ற வகையில் அது கொடுத்த நம்பிக்கை வேற லெவல்.

பின்னர், இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேமென்ட் வர துவங்கியது. இந்நிலையில் எனக்கு திருமணம் ஆக, வேலை, குடும்பம், பிளாக் போன்றவற்றை ஒரு சேர நிர்வகிப்பது சவாலாக இருந்தது.

கணவர் சதீஷ், 'வேலையை விட சமையல் பிளாக்கில் தான் உன் எதிர்காலம் இருப்பதாக நினைத்தால், அதில் முழு கவனத்தையும் செலுத்து; நிச்சயம் சாதிக்க முடியும்' என்று ஊக்கம் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு முழுநேர பிளாக்கராக மாறினேன்.

கூடவே, 'பேக்கிங்' தொழிலிலும் இரண்டு ஆண்டுகள் கவனம் செலுத்தினேன்; வீட்டிலேயே விதவிதமான கேக் ஆர்டர்கள் எடுத்து, நாகர்கோவில் முழுக்க சப்ளை செய்தேன்.

சமையல் தான் என் கன்டென்ட். வெரைட்டியும், புதுமையும் தான் என் பார்முலா. அதற்கு பரிசாக பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க துவங்க, சோஷியல் மீடியா என்ற பெரும் வெளியில் எனக்கும் ஓர் அழுத்தமான இடத்தை அமைத்து கொண்டேன்.

இப்போது யுடியூபில் எனக்கு 5.45 லட்சம், இன்ஸ்டாவில் 4.7 லட்சம், பேஸ்புக்கில், 14 லட்சம் பாலோயர்ஸ் இருக்கின்றனர். -

ஆண்டுக்கு ஒருமுறை கணவர் மற்றும் என் இரு மகள்களுடன் வெளிநாடு ஒன்றுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

பல நாடுகளின் உணவு பழக்கங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த பயணங்களை பயன்படுத்தி கொள்வேன். அங்கு குக்கரி வகுப்புகளில் பங்கேற்பேன்.

அப்போது தான் அவர்களின் பாரம்பரிய ரெசிப்பிகளை நேரடியாக கண்டு, கற்க முடியும்.






      Dinamalar
      Follow us