தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 28, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2026 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் அறிக்கை:
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல், எது வரைக்கும் செல்லும் என்பதை, 'ஜெம்' வீரமணி வழக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. பண பலத்திற்கு அஞ்சாமல், இதை வெளிக்கொண்டு வந்தவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது, அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீள வேண்டும். இனியொரு சம்பவம் இதுபோல நடக்கலாகாது.
பண பலத்துக்கு பணிந்து, கடந்த ஆட்சியில், இந்த வழக்கை மூடி மறைச்சவங்களையும் சேர்த்து, நீங்க கண்டிச்சிருக்கலாமே!


மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே பேட்டி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பா.ஜ., ஆதரவாளராக செயல்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்கி, சிறையில் அடைக்க வேண்டும். அவரது தலைமையில் நடந்த தமிழகம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்தி மீண்டும் தேர்தல்களை நடத்த வேண்டும். தமிழகத்தில் கண்டிப்பாக மறு தேர்தல் தேவைப்படுகிறது.

அடடா... 'அந்த கோட்டை எல்லாம் அழிங்க; நான் மறுபடியும் பரோட்டா சாப்பிடுறேன்'னு சொன்ன நடிகர் சூரி காமெடி மாதிரி பேசுறீங்களே!

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை:

'ஜெம்' வீரமணியின் வழக்கை, தமிழக அரசு மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பி விடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் வாயிலாக கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

வீரமணி மட்டுமல்ல; கடந்த ஆட்சியில் அவரை தப்ப விட்டவங்க மீதும் கடும் நடவடிக்கை எடுத்தே ஆகணும்!

காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி:

தி.மு.க., ஆட்சியில் கவர்னர், முதல்வர் இடையே, தினசரி சண்டை தான் நடந்தது. கவர்னருக்கு எதிராக, தி.மு.க.,வினர் கருப்புக்கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவித்தனர். 'கவர்னர் பதவியே வேண்டாம்' என, அறிக்கை விட்டனர். மக்கள் பிரச்னைக்காக, கவர்னரை சந்தித்து கோரிக்கை வைக்கவில்லை. த.வெ.க., ஆட்சியில் அப்படி அல்ல. கவர்னருடன் இணக்கமான உறவு இருப்பதால், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன பிரச்னைகளை சுமுகமாக பேசி தீர்ப்போம்.

வாஸ்தவம் தான்... 'காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்றால், காரியம் தான் முக்கியம்' என்ற வகையில் செயல்படும் உங்களை பாராட்டலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us