sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 29, 2026 03:08 AM

Google News

PUBLISHED ON : மார் 29, 2026 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி டில்லிக்கு சென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது. 'பா.ஜ., தமிழகத்தில் காலுான்றி விடும்' என கூறியே, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு சீட்களை குறைத்துள்ளனர். எனவே, முதல்வர் ஸ்டாலினுக்கு நாங்கள் உதவி செய்து கொண்டிருக் கிறோம். தி.மு.க., கூட்டணியில், வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமையாக இருக்கின்றன. பலமான கட்சிக்கு பலவீனமான கட்சிகள் அடிமைகளா தான் இருக்கணும்... இதற்கு, உங்க கூட்டணியும் விதிவிலக்கு இல்லையே!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை: தென் மாவட்டங்களில் அதிகமாக வாழ்ந்து வரும் சமுதாயங்களில், நாடார் சமுதாயமும் ஒன்று. அவர்களை ஒன்றிணைத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றிவாகை சூடும் வகையில், தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, நாடார் சமுதாய மக்களை ஓரணியில் திரட்டி, தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்.

அ.தி.மு.க., கூட்டணியில் இவருக்கு ஒரு சீட் கூட ஒதுக்கா விட்டாலும், அந்த அணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்னு சொல்றாரே... தேர்தலில் அ.தி.மு.க., அணி ஜெயித்தால், இவருக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும்

! எம்.ஜி.ஆர்., - -அ.தி.மு.க., கட்சியின் பொதுச்செயலர் ரஞ்சித்குமார் பேட்டி: முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கட்சியை துவங்கினோம். ஆனால், சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்த, பண்ருட்டி ராமச்சந்திரன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால், கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகி, எங்கள் கட்சி தொண்டர்களுடன் த.வெ.க.,வில் இணைய உள்ளேன்.

உலகிலேயே கட்சியை துவங்கிய ஒரே மாசத்துல, அதன் பொதுச்செயலரே கட்சி தாவும் காமெடி எல்லாம் தமிழகத்தில் தான் நடக்கும் போலிருக்கு!

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலர் ரபீக் முகமது அறிக்கை: 'ஓரணியில் தமிழகம்' என்ற தி.மு.க., வின் முழக்கம் உண்மையானால், கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், பெரியண்ணன் போக்கில் தி.மு.க., செயல்படுகிறது. முஸ்லிம்களின் ஓட்டு வங்கி, 6 சதவீதம் உள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாக 6 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கியது ஏற்புடையதல்ல. காலம், காலமாக நம்பிக்கைக்குரிய தோழமையாக திகழும் எங்களை புறக்கணித்தது ஆணவத்தின் வெளிப் பாடாக கருதுகிறோம்.

ஒரு சதவீத ஓட்டுக்கு, ஒரு சீட் போதும் என்ற கணக்கின் அடிப்படையில் ஒதுக்கி இருப்பாங்களோ?






      Dinamalar
      Follow us