sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 28, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2026 03:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சமீபத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க., சொன்னதை செய்யும்; செய்வதை தான் சொல்லும்' என, முழக்கமிட்டார். ஆனால் உண்மையில், 'அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன் நம் பக்கத்தில் அமர்ந்து அவர் செய்து கொடுத்த சத்தியத்தை, இதுவரை நிறைவேற்றவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.

காலையில் என்ன டிபன் சாப்பிட்டோம் என்பதையே மறந்துடுற இந்த காலத்துல, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் யார் நினைவில் வச்சிருப்பாங்க?

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: திராவிட மாடல் அரசு, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையில் முதன்மை மாநிலமாக மாற்றி, தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டது. உலக போதை பொருள் சாம்ராஜ்ய நாடாக விளங்கும் மெக்சிகோ போல் தமிழகம் மாறி விட்டது ஆபத்தானது. போதையால், இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி மரண படுக்கையில் தள்ளியது தான், திராவிட மாடல் அரசின் சாதனை. தி.மு.க., ஆட்சியின் இறுதி நாட்களிலாவது, மக்களுக்கு நன்மை செய்ய முயற்சிக்க வேண்டும்.

இரண்டரை மணி நேர சினிமாவில், இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் பண்ணிட்டு, 'கிளைமாக்ஸ்'சில் வில்லன் திருந்துவது மாதிரி, தி.மு.க., ஆட்சியும் மாறணும்னு எதிர்பார்க்கிறாரோ?

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: தமிழகத்தைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளுடன் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பல முறை கடிதம் எழுதியும், கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகு களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. மத்திய அரசின் வெளியுறவுத்துறை, தமிழக மீனவர்கள் பிரச்னையில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கவனத்துக்கு இப்பிரச்னையை எடுத்து சென்று, வெளியுறவுத் துறையிடம் வலியுறுத்த சொல்லலாமே!

தி.மு.க., ஆதரவாளரான, நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி : 'அறிவாலயம் அருகில் யார் நடந்து சென்றாலும் கூட்டணிக்கு சேர்த்து விடுவர்' என, நடிகர் விஜய் குழந்தைத் தனமாக பேசுகிறார். மே மாதத்திற்கு பின் ஏழாவது முறையாக, தி.மு.க., ஆட்சி அமைக்கும். இரண்டாவது முறை, முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார். ஜூன் மாதத்திற்கு பின் விஜய் நடிக்கச் செல்வார்.

நடிகராக இருக்கும் இவர், ஜோதிடமும் படிச்சிருக்காரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us