sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

3


PUBLISHED ON : பிப் 18, 2026 02:19 AM

Google News

PUBLISHED ON : பிப் 18, 2026 02:19 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டி: 'என் ராதாபுரம் தொகுதியில் எனக்கு நிறைய கல் குவாரிகள் உள்ளன' என, 'வாட்ஸாப்'பில் வதந்திகள் வருகின்றன. கல் குவாரி அமைக்கும் எண்ணம் எனக்கு இருந்திருந்தால், 100 குவாரிகளை உருவாக்கியிருக்க முடியும். ராதாபுரம் தொகுதியில் எனக்கோ, என் மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ எந்த கல் குவாரியும் கிடையாது. அப்படி இருக்குமானால், அதை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி தருகிறேன். காங்., - த.மா.கா., கடைசியா தி.மு.க.,ன்னு நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்ட இவர், எந்த சொத்தையாவது தன் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ வச்சிருப்பாரா என்ன?

மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம் பேட்டி: தேர்தல் முடிவுகளில் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி என்பது வேறு. அத்தகைய சூழ்நிலை வருமா, வராதா என்பதை இப்போது கணிக்க முடியாது. எங்களை பொறுத்தவரை தி.மு.க., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் இன் னொரு கட்சியின் தலைமையில் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்பது எங்களின் நிலைப்பாடு அல்ல.

ஓ... 'வந்தால் ராஜாவா தான் வருவோம்... மத்தவங்க தலைமையின் கீழ் செயல்பட மாட்டோம்'னு சொல்றாரோ?

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: நாட்டில், 600க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்திரா, ராஜிவ், சஞ்சய் பெயர்களுடன், தங்கள் பெயரையும் முன்னிலைப்படுத்தியது காங்கிரஸ் கட்சி. இவர்களுக்கு காந்தி, அப்பாவா, மாமாவா, சொந்தக்காரரா அல்லது குறைந்தபட்சம் துாரத்து உறவா என்றால், நிச்சயமாக இல்லை. மகாத்மா காந்திக்கும், இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. காந்தி பெயரை திருடி தங்கள் பெயரோடு சேர்த்து, மக்களை ஏமாற்றுகிறது இந்த போலி காந்தி கும்பல்.

மைசூருக்கும், மைசூர் போண்டாவுக்கும் உள்ள உறவு தான், காந்தி பெயருக்கும், இந்திரா குடும்பத்துக்கும் இருக்கும் உறவு!

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'மகளிர் உரிமைத் தொகை, 5,000 ரூபாய் வழங்கி, தேர்தலில் வென்று விடலாம் என நினைத்தால் அது மூட நம்பிக்கை' என, காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி கூறுகிறார். அவரது கூற்றுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசை வைத்துக்கொள்ளப் போகிறதா, கைகழுவி விடப் போகிறதா என்பது தான், 'கிளைமாக்ஸ்' காட்சி. 'ஆட்சியில் பங்கில்லை' என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்தது போல், காங் கிரஸ் கூட்டணி முறிவையும் அவர் அறிவிப்பாரா அல்லது ஆர்.எஸ்.பாரதி வாயிலாக சொல்ல வைப்பாரா?

அவசரப்படாதீங்க... கத்திரிக் காய் முற்றினால் கடைக்கு வந்து தானே ஆகணும்!






      Dinamalar
      Follow us