sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : டிச 25, 2025 03:29 AM

Google News

PUBLISHED ON : டிச 25, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., பொதுச்செயலர், ஏ.பி.முருகானந்தம் அறிக்கை:

'தேர்தல் கமிஷனின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மட்டும் சரியாக நடக்கவில்லை' என்ற பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன் வைக்கின்றன. குஜராத்தில், 73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

'அந்த, 73 லட்சம் பேருமே, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதவங்க' என்றுதான் தி.மு.க.,வினர் விதண்டாவாதம் பண்ணுவாங்க!

தமிழக பா.ஜ., மூத்த தலைவர், தமிழிசை சவுந்த ரராஜன் பேச்சு:

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில், வாழ்த்து சொல்லி பேசுவதை விட, பா.ஜ.,விற்கு எதிராக விஷத்தை கக்கி இருக்கிறார். 'அனைத்து மதத்தினரும் வாழ்த்துகளையும், உணவுகளையும் விழாக்களின் போது பரிமாறிக் கொள்வது தான் தமிழகம்' என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், என்றாவது, ஹிந்து மத விழாக்களுக்கு ஹிந்து சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை பரிமாறி இருக்கிறாரா?

அப்படி வாழ்த்து சொல்லிட்டா, அவரது மதச்சார்பின்மைக்கு பங்கம் வந்துடாதா?

எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர், கா.லியாகத் அலிகான் அறிக்கை: திருப்பரங்குன்றம்பிரச்னையில், மதக்கலவரத்தை தி.மு.க., துாண்டுவதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை புலம்புகிறார். தமிழக மக்கள், 95 சதவீதம் பேர், முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதை ஊடகங்களில் அண்ணாமலை பார்க்கவில்லையா? இப்படியெல்லாம் பேசி, பா.ஜ.,வை வளர்க்க முயற்சிப்பது, தங்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் தெரிந்து கொள்வார்.

வர்ற, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், நிறைய பேருக்கு பாடம் கற்றுக்கொடுக்க போகுது என்பது மட்டும் உறுதி!

தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன் பேட்டி:

சென்னை மாநகராட்சியால், ஐந்து மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப் பட்ட ரவிகுமார் என்ற துாய்மை பணியாளர்,மிகுந்த மன உளைச்சல் காரணமாக, தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் மக்கள் விரோத அரசை, இனி எதிர்க்க முடியாது என, நம்பிக்கை இழக்கும் சாமானியர்கள், தற்கொலையை நாடுவது, மனித இனத்திற்கே ஆபத்தானது.

வெளியில் தெரிவது, இதுபோன்ற சில சம்பவங்கள் தான்... நிறைய தற்கொலைகள் பதிவாகாமலே போவது இவருக்கு தெரியாதோ?






      Dinamalar
      Follow us