sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.,யுமான விஜய்வசந்த் அறிக்கை: டில்லியில் நடந்த குண்டு வெடிப்பை, லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுலை தொடர்புப் படுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தது கண்டனத்துக்குரியது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக, இவ்வளவு கீழ் மட்ட பொய்களை பரப்புவது வெட்கக் கேடானது. நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல். நீங்கள் சொல்வது சரியே. தாக்குதலுக்கு காரணம் யார் என்பதை கண்டறியும் முன், தனி மனிதரை தொடர்புபடுத்துவது சரியல்ல. மூத்த அரசியல்வாதிக்கு இது புரியாமல் இருக்காது. அதையும் மீறி சொல்கிறார் என்றால்... சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாகிறது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு: பொதுச்செயலர் இ.பி.எஸ்., இடும் கட்டளைப்படி நாம் சிறப்பாக செயல்பட்டால், தமிழகத்தில் உறுதியாக எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சி அமையும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், பொதுச்செயலர் இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமையும். ஒரு கிளை செயலராக இருந்து பொதுச்செயலராக இ.பி.எஸ்., உயர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், இ.பி.எஸ்.,சை ஓரங்கட்டி, உங்க தலைமையில மூணு பேரு, தனி ரூட் போட்டு, 'கட்சியின் எதிர்காலம்' குறித்து பேசினதா செய்தி வெளியாச்சே... அதெல்லாம் பொய்யோ?

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: நான், கட்சியின் வளர்ச்சிக்காக, 100 நாள் நடைபயணத்தை துவக்கிய போது, எத்தனையோ தடைகள் வந்தன; கடும் மன உளைச்சலில் இருந்தேன். அனைத்து பாரத்தையும் முருகன் மீது போட்டு திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நடை பயணத்தை துவக்கினேன். நுாறு நாட்களும் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன்.

கடவுள் முருகன் மீது, 'டோட்டல் சரண்டர்' ஆகிட்டா எல்லா கோரிக்கையையும் நிறைவேற்றித் தருவார்ங்கிறதை புரிஞ்சிக்கிட்டீங்க... உங்களின், தந்தையை மீறிய செயல்களையும் அதே தெய்வம் பார்த்துக்கிட்டிருக்குமே... என்ன செய்யப் போறீங்க?

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போது தி.மு.க.,வில் ஐக்கியம் ஆகி இருக்கும் நடிகருமான, எஸ்.வி.சேகர் பேட்டி: சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் என்ன என்பது புரியவில்லை. இந்த திருத்தப் பணியில் தேர்தல் கமிஷனின் நோக்கம் சரியாக இல்லை. வாக்காளர்கள் அதிகமாக ஓட்டு போட வேண்டும் என்ற மனநிலையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கையை குறைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி புரியவில்லை என்று, மற்றவர்கள் சொன்னா பரவாயில்லை... யூ டூ சேகர்?






      Dinamalar
      Follow us