தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 27

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 27

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 27

2


PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயராமன் பேச்சு: அ.தி.மு.க., என்ற இயக்கம் தியாகத்தால் உருவானது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இக்கட்சியை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய வரலாறு உள்ளது. இன்று தீர்ந்து போன சக்தி, மறைந்து போன சக்தி என விமர்சித்தாலும், இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த இயக்கம் இன்று தோற்கலாம்; நிச்சயம் வெல்லும்.

எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா தியாகம் செய்து அ.தி.மு.க.,வை வளர்த்தாங்க என்பது உண்மை தான்... இன்றைய தலைவர் பழனிசாமி, மேஜைக்கு அடியில், ‘ஊர்ந்து’ போனதை தவிர வேற எந்த தியாகமாவது செஞ்சிருக்காரா?

வி.சி.க.,வின் விழுப்புரம் லோக்சபா தொகுதி எம்.பி., ரவிகுமார் பேட்டி: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணி மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1.82 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, நீக்கப்பட்டவர்களின் விபரங்களை, ஓட்டுச்சாவடி வாரியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கலெக்டர் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தி சரிபார்க்க வேண்டும். அதுவரை, எஸ்.எஸ்.ஆர்., பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது.

‘அந்த 1.82 லட்சம் வாக்காளர் களால தான், 2024 லோக்சபா தேர்தல்ல ஜெயிச்சேன்... 2029 தேர்தலில் கரையேறுவது கஷ்டம்’னு பயப்படுறீங்களோ?

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: நாடு முழுதும் கரப்பான் பூச்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், பிரதமர் மோடியின் ஆட்சியை கவிழ்க்க மிகப்பெரிய சதியை செய்து கொண்டிருக்கின்றன. இந்த சதியை முறியடிக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

வாஸ்தவம் தான்... கரப்பான் பூச்சிகள் வீட்டுக்கும், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் கேடு என்பதில் மாற்று கருத்தே இல்லை!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேட்டி:


அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்காமல் சென்றவர் தான், த.வெ.க., அரசின் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார். அவர் தான், ‘அ.தி.மு.க.,வே இல்லை’ என்கிறார். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் தான். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் எப்படி இவ்வளவு ஓட்டுகள் கிடைத்தன. மக்களின் ஆதரவு நிரந்தரமாக அ.தி.மு.க.,விற்கு உள்ளது.
- தாராபுரம், மதுராந்தகத்தில் உங்க கட்சி மூணாவது இடத்துக்கு போயிடுச்சு... அடுத்து வர்ற ஐந்து தொகுதி இடைத்தேர்தல்லயாவது, ரெண்டாவது இடத்துக்கு வர முடியுமான்னு பாருங்க!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us