PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமிபேச்சு: வரும், 2026 சட்டசபைதேர்தலை மனதில் வைத்து, கல்லுாரி மாணவர்கள், இளம் வாக்காளர்களை, அ.தி.மு.க.,வில் சேர்க்க முழு முயற்சி மேற்கொள்வதோடு, அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், பயன்கள் குறித்து தெளிவாக விளக்கி, சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.அப்பாடா... இப்பவாச்சும், ஜெ., ஆரம்பித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறையை துாசு தட்டுறாங்களே!
தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை தலைவர் தனியரசு பேட்டி: தமிழகத்தில் நடிகர்களை நாடாள விட்டதால், மக்கள் அரசியல் விழிப்புணர்வுபெறவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தையும், விஜயின்அரசியல் வருகையையும் கொங்குஇளைஞர் பேரவை நிராகரிக்கிறது. விஜய் மட்டுமல்ல, அஜித், கமல், ரஜினியை மக்கள் ஏற்கக் கூடாது. சட்டசபை தேர்தலில் விஜயை மக்கள் நிராகரிப்பர்; அதன்பின் அவர் அரசியலில் இருந்து பின்வாங்குவார்.
விஜய், கமல் சரி... அரசியல் வேணாம்னு ஒதுங்கிய ரஜினியையும், நடிப்பு, கார் ரேஸ் போதும்னு இருக்கிற அஜித்தையும்ஏன் வம்புக்கு இழுக்கிறார்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் எதற்கெடுத்தாலும்போராட்டம் நடத்திக் கொண்டிருந்த கம்யூ.,க்கள், இப்போது பெட்டி பாம்பாக அடங்கிக் கிடக்கின்றனர். ஆளுங்கட்சியோடு கூட்டணிவைத்திருப்பதால், அவர்கள்செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க மறுக்கின்றனர். மொத்தத்தில் அவர்கள் விலைபோய் விட்டனர். தமிழகத்தில்நடக்கும் கொடுமைகளை, இனியாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிக்கொண்டு வர வேண்டும்.
எப்படி துாண்டி விட்டாலும், கோபப்பட்டு ஆளுங்கட்சிக்கு எதிராக காம்ரேட்கள் முழங்கிடுவாங்கன்னு கனவு கூட காணாதீங்க!
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலர் சோமசுந்தரம் பேட்டி: தான் ஆட்சியில் இருந்த போது,அரசு ஊழியர்களை அழைத்து கூட பேசாத தற்போதையஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாகஇருப்பது போன்று அறிக்கை வெளியிட்டு வருகிறார் தி.மு.க., பேசி நிறைவேற்றவில்லை; அவர்கள் பேசவே இல்லை என்ற புரிதல் அனைவரின் மனதிலும் உள்ளது.
அப்ப, அடுத்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகள் விஜய் கட்சிக்கு போயிடுமோ?

