sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன்திருப்பதி:

'முதல்வருக்கு ஏற்பாடு செய்த சமோசாவை காணோம்' என, குற்றவியல்காவல் துறை விசாரணைக்கு, ஹிமாச்சலபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது, அங்கு நடக்கும் காங்., ஆட்சியின் கேலிக்கூத்தை உணர்த்துகிறது. ஐந்து நட்சத்திரஹோட்டலில் இருந்து வரவழைத்த சமோசாக்களை, முதல்வரின் கண்களில்கூட காண்பிக்காமல், அவரது அதிகாரிகளேசாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டனர்.

'சாதாரண சமோசா முறைகேட்டை கூட நாங்க ஈசியா விடமாட்டோம்'னு காங்கிரசார் தம்பட்டம் அடிப்பாங்களோ?

கன்னியாகுமரி காங்., - எம்.பி.,விஜய் வசந்த் அறிக்கை:

பணவசதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும், தங்கள் கல்விப் பயணத்தை பாதியில்நிறுத்திவிடக் கூடாது என்பதில்,என் தந்தை மறைந்த வசந்தகுமார் உறுதியுடன் இருந்தார்.இதற்காக, ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவிகள் செய்து வந்தார். அவர் மறைவுக்குப் பின், அவரது வழியில் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறோம். மாணவர்களுக்குசிறந்த கல்வி செல்வத்தை அளிக்க வேண்டியது அனைவரது கடமை.

'தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்'னு சொல்ற மாதிரி, உங்க தந்தை செய்த சேவையை இன்னும் அதிகப்படுத்தினால், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம்!

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:

மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர் சமுதாயம், பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் உள்ளது. தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல்இருக்க, மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசை எதிர்த்து, 'மூச்சு' கூட விடாம இருந்தாரே... இப்ப என்னாச்சு?

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:



அரசின் செயல்பாடு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்தான் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். இதை ஆலோசனையாக எடுத்துக்கொண்டு, கள ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத் துறை அமைச்சர் முயற்சிக்க வேண்டும். அதற்கு பதிலாக விவாதத்திற்கு அழைப்பது ஏற்புடையது அல்ல.விவாதத்திற்கு நாங்களும் தயாராக உள்ளோம். புள்ளிவிபரம் எங்களிடம் உள்ளது. அரசு செய்யத் தவறியபட்டியலும் உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறையை கவனித்த, மருத்துவரான உங்களோடு அவர் விவாதிக்க முன்வருவது கேள்விக்குறிதான்!






      Dinamalar
      Follow us