PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி., சமீபத்தில் பெரம்பலுார் வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘த.வெ.க., அரசால், சென்னையில் பெய்த மழையை சமாளிக்க முடியவில்லை என்று தி.மு.க.,வினர் குற்றம் சாட்டு கின்றனர். அவர்கள் ஆட்சியில், 4,000 கோடி ரூபாயில் சரியாக மழைநீர் வடிகால் அமைத்திருந்தால், இன்று ஏன் மழை வெள்ளம் ஏற்படுகிறது.
‘சென்னையில் தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது, மாநகராட்சி ஊழியர்கள் 15 ஆயிரம் பேர், தன்னார்வலர்கள், அமைச்சர்கள், ஆயிரத்திற்கும் அதிகமான மின் மோட்டார்களை பயன்படுத்தி வெள்ள நீரை வெளியேற்றினர். நியாயப்படி தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தான் களத்தில் இறங்கி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டு குறை கூறக்கூடாது’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘த.வெ.க., அமைச்சர்களை விட, அவங்க அரசுக்கு இவர் தான் அதிகமா வக்காலத்து வாங்குறார்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
