PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

அரியலுாரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'மூன்று ஆண்டுகளுக்கு முன், பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்படும் மக்கள், பஸ் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தனர்; இன்று நிலைமை மாறி இருக்கிறது. சமீபத்தில், தீபாவளிக்கு சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டபோது, கடைசி பஸ்சும் புறப்பட்ட பிறகு தான், அரியலுாருக்கு செல்வேன் என்று கூறி, பஸ் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, அரியலுாருக்கு வந்தவர் தான் அமைச்சர் சிவசங்கர். அவரது பணிகளை மனதார பாராட்டுகிறேன்' என்றார்.
இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம ஊர்ல முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது முதல்வருக்கு நல்லாவே தெரியும்... இருந்தாலும் ராஜாவை கடுப்பேத்துற மாதிரி, அமைச்சரை இப்படி புகழ்ந்து பேசுறாரே...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

