/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கிடைப்பதும் கிடைக்காம போயிடும்!'
/
'கிடைப்பதும் கிடைக்காம போயிடும்!'
PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மீன்பாசி ஏலம் விடுவது தொடர்பாக விவசாயி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பெண் அதிகாரி பதில் அளித்தார். அதை ஏற்றுக்கொள்ளாத விவசாயி, அதிகாரி பொய் சொல்வதாக கூறினார்; அதற்கு, மற்ற விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதனால், 'டென்ஷன்' ஆன கலெக்டர், 'இது பொதுக் கூட்டம் அல்ல; குறைகளை தீர்க்கும் கூட்டம். அதிகாரிகளை விமர்சனம் செய்து, விவசாயிகள் கைதட்டுவது ஆரோக்கியமானது அல்ல' என, கடிந்து கொண்டார்.
இதை கேட்ட விவசாயி ஒருவர், 'குறையிருந்தால் சொல்லுங்கள்; செய்து தருகிறேன் என்று சொல்லும் கலெக்டர் முன், அதிகாரிகளை எரிச்சல்படுத்துவது சரியில்லை. அரசு அதிகாரிகளை பகைத்து கொண்டால், கிடைக்கிறதும் கிடைக்காம போயிடும்...' என, புலம்பியபடியே கிளம்பினார்.

