PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ராஜா, 'நாம் இந்தியர்' என்ற பெயரில், ஒரு கட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது; 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிருபர்களிடம் ராஜா கூறும்போது, '2026 சட்டசபை தேர்தலில், எங்களின், நாம் இந்தியர் கட்சி சார்பில், 120 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.
'தேர்தல் அறிவிப்புக்கு பின், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியா என முடிவு செய்யப்படும். விஜய் செல்வாக்கான நடிகர்... தேர்தல் நேரத்தில் அவர் எங்களை அணுகினால், கூட்டணி குறித்து முடிவு செய்வோம்...' என, 'சீரியசாக' பேசினார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வந்தா, தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், மீதமுள்ள, 114 தொகுதிகளை அவருக்கு ஒதுக்குவார் போல...' என, கிண்டல் அடித்தபடியே கிளம்பினார்.

