PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

கோவையில் நடந்த, பீம்ராவ் இலவச சட்ட உதவி மையத்தை, ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் திறந்து வைத்தார்.
இதில் பங்கேற்ற, அண்ணா பல்கலையின் முன்னாள்துணைவேந்தர் பாலகுருசாமி பேசுகையில், 'ஏழைகள்,தங்கள் உரிமைக்காக கோர்ட்டில் வழக்கு தொடுத்து, வக்கீல்களுக்கு செலவழிப்பது மிக கஷ்டம். இப்போதெல்லாம் வக்கீல்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு.
'அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் நான் ஒரு வழக்கு தொடுத்தேன். இதற்கு வக்கீலுக்கு, 5 லட்சம் ரூபாய் 'பீஸ்' கொடுத்தேன். ஏழைகளால் கொடுக்க முடியுமா...எனவே, இதுபோன்ற சட்ட உதவி மையம் துவங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்' என்றார்.
இதைக் கேட்ட வக்கீல் ஒருவர், 'பாலகுருசாமி மனதில்பட்டதை தயக்கமின்றி பேசக்கூடியவர்னு அறிமுக உரையில் சொன்னாங்க... மனதில் பட்டதை பேசுறேன்னு, நம்மை போட்டுத் தாக்கிட்டாரே' என, புலம்பியபடியே கிளம்பினார்.

