PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம், சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ' பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது, 'வீ த லீடர்ஸ்' அமைப்பை வளர்க்க கூட்டம், மாநாடு நடத்தலாம். ஆனால், அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்; ஏறிய ஏணியை எட்டி உதைக்காமல் இருக்க வேண்டும். ஏறிய ஏணி என்பது பா.ஜ., கட்சி. அதன் சித்தாந்தம், கொள்கைகளால் தான் தமிழகத்தில் அண்ணாமலை அடையாளம் காணப்பட்டார்.
'ஆனால், மத்திய அரசு திட்டங்களை பற்றியும், தேசிய கட்சிகளின் பார்வைகளை கொச்சைப்படுத்தியும் அண்ணாமலை பேசுவது கண்டனத்துக்குரியது. அவர், தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால், மக்களால் திருத்தப்படுவார்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அண்ணாமலையால் தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு வங்கி அதிகரிச்சதை பத்தி பேச மாட்டேங்கிறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
