தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/'தலைவர் சகலகலா வல்லவர்!'

'தலைவர் சகலகலா வல்லவர்!'

'தலைவர் சகலகலா வல்லவர்!'


PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையில் நடந்த, 'கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழாவில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'என் துறையில் முதன் முதலில் தாத்தா கருணாநிதி பெயரில் திட்டம் துவங்கியுள்ளேன். விளையாட்டிற்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கருதலாம். கருணாநிதி சிறு வயதிலேயே களத்தில் இறங்கி, எல்லா விளையாட்டையும் விளையாடியவர்.

'அதன்பின் அரசியலுக்கு வந்ததால், ஆடுகளத்தில் நுழையாமல் தவிர்த்தார். கிரிக்கெட், கால்பந்து என எதுவாக இருந்தாலும், நெருக்கடியான நேரத்திலும், 'டிவி'யில் பார்த்து ரசிப்பார். விளையாட்டுக்கு தேவையான அனைத்து திறமைகளும் அவரிடம் இருந்தன' என்றார்.

மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம தலைவர் சகலகலா வல்லவரா இருந்திருக்காருப்பா... அவரது வாரிசுகளிடம் அந்த திறமை இல்லையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us